IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கை கால்களை கட்டி அறையில் பூட்டி கணவரை கொலை செய்த மனைவி கைது

316


மனைவி தன் கணவரை கட்டையால் தாக்கி, கை, கால்களை கட்டி வீட்டின் அறைக்குள் வைத்து பூட்டி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் காட்டு ராஜா. இவரது மனைவி முத்துலெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் தற்போது பரமக்குடி வைகை நகரில் வசித்து வந்தனர்.


காட்டு ராஜா கடந்த 25 ஆண்டுகளாக குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு ராஜா விடுமுறையில் பரமக்குடி வந்துள்ளார். அப்போது அவர் இங்குள்ள சொத்துகளை விற்று விட்டு குவைத்தில் வசிக்க போவதாக தனது குடும்பத்தினரிடம் கூறினார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.


இந்நிலையில் இரவில் வீட்டிற்கு வந்த காட்டுராஜா வுக்கும் மனைவி முத்துலெட்சுமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மகள் காட்டுராஜாவிடம் தகராறு செய்கிறீர்கள் என கேட்டால். அதனால் ஆத்திரம் அடைந்த காட்டுராஜா மகளின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார். இதனை மனைவி முத்துலெட்சுமி தடுத்தும் காட்டுராஜா கேட்க வில்லை. அதனால் கோபம் அடைந்த முத்துலெட்சுமி அருகில் இருந்த மரக்கட்டையால் காட்டுராஜா தலையில் பலமாக தாக்கினார்.


இதில் மயக்கம் அடைந்த அவரை கை, கால்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து கண் விழித்த காட்டுராஜா வீட்டில் இருந்தவர்களை மிரட்டினார். இதனால் பயந்த முத்துலெட்சுமி கட்டுகளை அவிழ்க்காமல் அவரை அங்குள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார். அதனை தொடர்ந்து தற்செயலாக அவரது குடும்பத்தினர் அந்த அறையை திறந்து பார்த்த போது அங்கு காட்டுராஜா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டுராஜாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முத்துலெட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


#murder #husband #arrested #Wife