IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வைகை ஆற்றில் மாணவனை புதைத்த வழக்கில் 5 பேர் கைது!

14

திருப்புவனம் வைகையாற்றில் மாணவனை கொன்று புதைத்த வழக்கில் மேலும் 5 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தேரடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் அஜித்குமார் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று அஜித்குமார் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை. இதனால் பயந்த பெற்றோர், போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.


விசாரணையில் பழையூரை சேர்ந்த திவாகர் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை செய்த போது பல தகவல்களை கூறினார். திவாகர் மற்றும் அவரின் நண்பர்கள் அய்யனார் (வயது 21), அஜய் (வயது 21), தினேஷ்குமார் (வயது 21), சங்கர் மற்றும் சிவமணி அனைவரும் அஜித்தை கொலை செய்துள்ளனர்.  இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

நள்ளிரவில் நடுரோட்டில் வீசப்பட்ட ஆண் சிசு நாய்களிடம் இருந்து தப்பிய அதிசயம்

இந்த விசாரணையில் அஜித்துக்கும் இவர்களுக்கும் முன்பகை இருந்துள்ளது. அதனால் அஜித் குமாரை திருப்புவனம் வைகை ஆற்றுக்கு பேச வேண்டும் என வரவழைத்து,  அவரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் ஆத்திரம் குறையாமல் அவர் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளனர். அதன் பிறகு வைகை ஆற்றின் நடுவில் புதைத்து விட்டதாக கூறினர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட 2 பேர் மதுரை ஐகோர்டில் சரணடைந்தனர். மேலும் இக்கொலையில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

#madurai #crime #murder #arrested