IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

முரசொலி இடம் பஞ்சமி என்று கூறி ராமதாஸ் புரூடா விடுகிறார் – ஸ்டாலின் சவால்

Get real time updates directly on you device, subscribe now.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் அசுரன். இந்த படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், அசுரன்படம் அல்ல..பாடம் என்று அசுரன் படக்குழுவினர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மற்றும் டிவிட்டரில் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பாமக தலைவர் ராமதாஸ் கருத்து தெரிவிக்கையில், அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வலைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என்றார் ராமதாஸ்.

ராமதாஸின் இந்த கருத்திற்கு ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முரசொலி அலுவலக கட்டிடம் உள்ள நிலம் பஞ்சமி நிலமே அல்ல. வழிவழியாக தனியாருக்கு சொந்தமாக பாத்தியப்பட்ட பட்டா நிலம். அந்த நிலம் பஞ்சமி நிலம் ராமதாஸ் பச்சபொய் சொல்கிறார். அதை பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே போகிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் ராமதாசும், அன்புமணியும் அரசியலை விட்டு விலக தாயரா ?என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.

இந்நிலையில் ஸ்டாலின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் அல்ல என்றும் தனியாருக்கு சொந்தமான பாத்தியப்பட்ட நிலம் என்று கூறி அதனுடன் பட்டா பத்திரத்தையும் டுவிட்டரில் இணைத்து பதிவிட்டுள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader