முந்தானை முடிச்சு படத்திற்காக பாடம் எடுக்கப்போகும் டீச்சர் யார்?

Get real time updates directly on you device, subscribe now.

சமீபத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான இரண்டாம் குத்து படத்தினை எப்படி திரையரங்குகளில் பார்க்க போனால், என்ன எதிர்பார்ப்பார்களோ அந்த மாதிரி ஒரு ஹைப் கொடுத்த படம் முந்தானை முடிச்சு. அதுக்காக இப்போ வர மாதிரி ஓப்பனாக டபுள் மீனிங் வசனமும் கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாகவும் எல்லாம் படம் இருக்காது.

அந்த காலத்தில் முந்தானை முடிச்சு மாதிரியான படங்களே, வயது வந்தவர்களுக்கான படமாக பார்க்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தில் பாக்கியராஜ் ஹீரோவாகவும், ஊர்வசி ஹீரோயினாகவும் நடிச்சிருந்தாங்க.

இந்தப்படத்தில் முருங்கை காய் சீனை வைத்து மாஸ் காட்டிய படம், 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீமேக்காக உள்ளது. இதில் சசிகுமார் ஹீரோவாக நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்திற்கு ரொம்ப முக்கியமான ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாங்க. கிராமப்பாங்கான படங்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் முகம் அருமையா செட்டாகும். முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராஜேசை தவிர, வேறு யாரை போட்டாலும் செட் ஆகாது.

ஆனால் முந்தானை முடிச்சு 2 படம் 1983 ஆம் ஆண்டு வெளியான படத்தின் தொடர்ச்சியாக இருக்காது. இந்த காலத்துக்கு ஏற்ப கதைக்களம் எப்படி அமைய வேண்டுமோ, அதற்கேற்ப மாற்றியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுல ஹைலைட் என்னனா, அன்னைக்கு வெளியான முந்தானை முடிச்சு படத்தில் வந்த டீச்சர் கேரக்டரில், இப்போ யார் நடிக்கப்போறாங்க என்பது தான் கேள்வி. கொஞ்சம் கிளுகிளுப்பான கேரக்டரா இருப்பதால், யாரை அந்த கதாபாத்திரத்திற்கு சரியாவரும் என்ற ஒரே தேடல் நடைபெறுகிறது.

இறுதியா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்த யாஷிகாவை டீச்சரா நடிக்க விடலாம்னு பேச்சு போயிட்டு இருக்கு.

இவங்க சம்மதிக்கவில்லை என்றால், பிக்பாஸ் பிரபலம் ரைசா வில்சனிடம் கேட்கலாம்னு இருக்காங்களாம். ஆனால் அவரும் நடிக்கவில்லை என்றால் தற்போது பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டு வரும் ஷிவானி சரியாக இருக்குமோ ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

#mundhanaimuduchu2 #sasikumar #teacher #yashika #shivani

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More