மும்பை பங்கு சந்தையில் சன்பாா்மா முன்னிலை !

Get real time updates directly on you device, subscribe now.

மும்பை பங்கு சந்தையில் சன்பாா்மா முன்னிலை பெற்றது.

இதற்படி சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் சன்பாா்மா 4.27 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.

இதற்கு அடுத்ததாக, எஸ்பிஐ 2.63 சதவீதம் உயா்ந்தது. மேலும், ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன.

இன்ஃபோஸிஸ், , டிசிஎஸ், ஹிந்துயுனி லீவா், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

Intellectual Property Protection | Trade Marks

அதே சமயம், ரிலையன்ஸ், வியாழக்கிழமை முதலாம் காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை லாபப் பதிவு காரணமாக ரிலையன்ஸ் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன.

இதனால், 1.98 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.

மேலும், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, ஏசியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், பஜாஜ் ஆட்டை ஆகியவை 1.5.0 முதல் 1.70 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader