IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மீண்டும் ஆசிய பணக்கார்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்த முகேஷ் அம்பானி, மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் 8வது இடமாகும்.

இந்தியா மற்றும் ஆசியாவின் முதன்மை பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி, கடந்த சில மாதங்களுக்கு கச்சா எண்ணெய் கடுமையான விலை வீழ்ச்சியடைந்ததால் சரிவை சந்தித்தார். இதனால் அவர் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த நேரத்தில் தனது டிஜிட்டல் நிறுவனமான ஜியோவின் 24.17 சதவீத பங்குகளை விற்றார். இதனை பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுயிடி பங்குதாரர்கள், கேகேஆர் உள்ளிட்ட உலக முன்னணி நிறுவனங்கள் ரூ.1,15,693.95 கோடிக்கு வாங்கின.

இதன்மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மளமளவென உயர்ந்தது. பங்குச்சந்தைகளிலும் அவரது பங்கு மதிப்புகள் உச்சம் தொட்டன. இதன் காரணமாக அம்பானியின் சொத்த மதிப்பு 28 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தம் 68.3 பில்லியன் டாலர் ஆனது. இது இந்திய மதிப்பில் இது ரூ.4.9 லட்சம் கோடியாகும். இதனால், இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

மேலும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்தார். வெறும் 58 நாட்களில் கடனே இல்லாத நிறுவனமாக முகேஷ் அம்பானியின் நிலையன்ஸ் நிறுவனம் மாறியது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader