10.1 C
Munich
Monday, October 3, 2022

முதுமலை காடு உருவான வியத்தகு வரலாறு

Must read

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் தான் முதுமலை காடு அமைந்துள்ளது. இதன் சிறப்பு ஒன்று உள்ளது. அது கர்நாடகா மற்றும் கேரளாவின் எல்லைகள் இங்கு தான் அமைந்துள்ளது.

முதுமலை காடு தற்போது உருவானவை அல்ல. அது சங்ககால இலக்கிய காலத்திலேயே உருவானவை என்று கூறப்படுகிறது. அப்போது இதன் பெயர் முதிரம் மலை.

சங்க காலத்தில் குமணன் என்ற மன்னன் தற்போது உள்ள நீலகிரி மாவட்டத்தின் அரசனாக இருந்துள்ளார். அவருடைய தம்பி நாட்டை இரண்டாக பிரித்துள்ளார். அப்போது அதற்கு பயந்து குமணன் காட்டிற்குள் பதுங்குகிறார். அப்பொழுது தான் நாட்டில் இப்படியொரு இருப்பது தெரியவந்துள்ளது.

நல்ல முதிர்ச்சி அடைந்த மலை என்பதை வெளிப்படுத்தும் வகையில் முதிர்வு மற்றும் மலையை இணைத்து முதிர்வு மலை என பெயரிட்டனர். அது நாளடைவில் முதுமலை என அழைக்கப்பட்டு வருகிறது.

முதுமலையின் இயற்கை வளங்கள் மற்றும் வனவிலங்குகள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பான சூழல் அங்கு விளங்குவதாக கருதப்பட்டு 1940ல் வனவிலங்கு காப்பகமாக முதுமலையை அறிவித்தனர். இதுதான் தென்இந்தியாவின் முதல் வனவிலங்கு காப்பகமாகும்.

ஆரம்ப காலகட்டத்தில் 60 சதுர கி.மீ பரப்பளவு தான் முதுமலை காட்டின் அளவாக இருந்துள்ளது. நாளடைவில் விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் வளங்கள் ஆகியவற்றை கணக்கீட்டு 1956ல் 295 கி.மீ ஆக விரிவடையைச் செய்துள்ளனர். அதனை முழுமையாக சுற்றிப் பார்க்க வேண்டுமனால் ஒரு வருடம் ஆகும்.

முதுமலையின் தற்போதைய பரப்பளவு 391 கி.மீ ஆகும். யுனெஸ்கோ இதன் பிரம்மாண்டத்தை பார்த்து உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக முதுமலையினையும் அறிவித்துள்ளனர். குறிப்பான முதுமலை காட்டில் நிறைய அதிசியங்கள் நிறைந்துள்ளன.

வனவிலங்கு காப்பகத்திற்கு உள்ளேயே வனப்பூங்கா அமைத்துள்ளனர். முதுமலைக்கு வரும் சுற்றுலா நபர்கள் வெறும் 5 சதவீத இடங்களை மட்டுமே பார்க்க முடியும். அந்தளவிற்கு பாதுகாப்பு கடினமாக இருக்கும்.

முதுமலை காப்பகத்தை தொடர்ந்து கர்நாடகா எல்லையில் பந்திப்பூ தேசிய பூங்கா உள்ளது. அதுமட்டுமின்றி கேரளா எல்லையில் வயநாடு காப்பகமும் உள்ளது. அதனால் எந்த வனவிலங்கு காப்பகத்திற்கு செல்ல வேண்டுமனாலும் முதுமலை வழியாகத்தான் செல்ல முடியுமாம்.

முதுமலையில் யானை, கரடி, புலி, மான் மற்றும் பாம்பு என ஏராளமாக விலங்குகளும் சர்வ சாதாரணமாக சுற்றி திரியுமாம். ஆனால் மனிதர்கள் கண்களில் ஏதேனும் ஒருசில விலங்குகள் மட்டுமே தென்படும். மற்ற விலங்குகள் அடர்ந்த காடுகளின் உள்ளே இருக்கும்.

கழுதைப்புலி மற்றும் பறக்கும் அணில் என அரியவகை விலங்குகளும் அந்த காட்டினுள் வாழ்கின்றன. மற்றும் மிகவும் அபூர்வமாக காணப்படும் கழுகுகளும் அங்கு வாழ்கின்றன. இவற்றில் மிகவும் சிறப்பான ஒன்று யானைகள் முகாம் மட்டுமே.

இந்த முதுமலை காட்டில் ஈர இலையுதிர் காடுகள் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள், புதர் காடுகள் என்பன இருக்கின்றன. அதனால் எப்பொழுதும் செழிப்பாக இருக்கும்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article