IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கேம் ஓவர், தந்தைக்கான டூட்டிக்கு திரும்பிவிட்டேன் – தல தோனி

0 9

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி காட்டிவிட்டு தற்போது தோனி தனது மகளுக்கு தலை உலர வைக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. கடினமான இலக்கை விரட்டிப்பிடித்த சென்னை அணியின் கேப்டன் தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்.

 

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி தனது மகளுக்கு தலை உலர வைக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

“கேம் ஓவர். ஒரு சிறப்பான தூக்கம். தற்போது தந்தைக்கான டூட்டிக்கு திரும்பிவிட்டேன்” என பதிவிட்டுள்ள இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

வீடியோ பதிவேற்றப்பட்ட கொஞ்ச நேரத்தில் 3.9 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர். 2.2 லட்சம் பேர் வீடியோவுக்கு லைக் செய்துள்ளனர்.