IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அனுஷ்கா சர்மாவால் தோனியின் ரசிகர்களை எரிச்சல் மூட்டிய விராட் கோலி

Get real time updates directly on you device, subscribe now.


இந்திய அணி வெஸ்ட் இண்டிஸ் அணியுடன் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் என் வளர்ச்சிபாதைக்கு காரணம் என் மனைவி மட்டும் தான் என்று விராட் கோலி கூறியதில், தோனியின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தன்னை சரியான பாதையில் வழிநடத்தி என்வெற்றி பாதைக்கு பக்கபலமாக இருப்பவர் என் மனைவி அனுஷ்காதான் என விராட் கோலி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை 2017ம் ஆண்டு கோலியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.


விராட் கோலி விளையாட செல்லும் அனைத்து நாடுகளுக்கும் கூடவே அனுஷ்கா சென்று விடுவார். பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து கொண்டு கோலியின் விளையாட்டை அனுஷ்கா உற்சாகப்படுத்தி வருவார். மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள், சில சமயம் அனுஷ்காவின் செயலைப் பார்த்து பாராட்டியும், கேலி கிண்டலும் செய்துள்ளனர்.


ஆனால் எவருடைய கேலி கிண்டலையும் பொருட்படுத்தாமல் கோலியை உற்சாகப்படுத்துவதில் மட்டும் அனுஷ்கா சர்மா கவனமாக இருப்பார் என்பதை நான் அனைவருமே கண்கூடாக பார்த்திருப்போம். ஆனால் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் விராட்கோலி விளையாடும் போட்டிகளுக்கு அனுஷ்கா வருவது குறைந்த பாடில்லை.


இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடி வரும் விராட் கோலி, அங்கு தொலைக்காட்சி ஒன்றில் கோலி மற்றும் அனுஷ்கா கலந்து கொண்டனர். அதில் பேசும் போது விராட் கோலி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசும் போது, அனுஷ்கா சர்மா என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம். கிரிக்கெட் என் வாழ்வில் கிடைத்ததை விட அனுஷ்கா என் வாழ்வில் கிடைத்தது மிகப்பெரிய வரம். அவர் எனக்கு சரியான ஜோடி அமைந்துள்ளது என்று நினைக்கிறேன்.


மேலும் அனுஷ்கா அவரது தொழிலை அவரே பார்த்துக்கொள்கிறார். மேலும் என்னையும் சரியாக புரிந்து கொண்டு சரியான பாதையில் வழிநடத்திச் செல்கிறார். அவரிடம் இருந்து நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளது. விரைவில் அதை கற்றுக்கொள்வேன் என்று நம்புகிறேன் என விராட் கோலி தெரிவித்தார்.


இவர் பேசியதில் ஒரு இடத்தில் கூட எம்.எஸ்.தோனியை பற்றி பேசவில்லை என தோனியின் ரசிகர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர். தோனி 2014ம் ஆண்டு டெஸ்ட் தொடரிலிருந்து கேப்டன் பதவியை துறந்தார். 2016ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து கேப்டன் பதவியை விராட் கோலியிடம் ஒப்படைத்தார். ஆனால் கேப்டன் பதவி மட்டும்தான் துறந்தாரே தவிர, கேப்டன் பொறுப்பில் இருந்து களத்தில் கிட்டதட்ட அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாகத்தான் தோனி செயல்பட்டார்.


விராட் கோலி பலமுறை தோனியிடம் ஆலோசனை கேட்டுதான் முடிவெடுப்பார். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் கூட அதை நாம் கண்கூடாக பார்க்க முடிந்திருக்கும். அணி இக்கட்டான சூழ்நிலைக்கு செல்லும்போதெல்லாம் கோலி ஓடி வந்து, தோனியிடம் ஆலோசனை கேட்டு அதன்படி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.


இந்நிலையில் தன் வெற்றிபாதைக்கும் , தன்னை வழிநடத்துவது என் மனைவி அனுஷ்கா மட்டும் தான் என்று எப்படி விராட் கோலியால் கூற முடிகிறது என தோனியின் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அல்லது ஒரு இடத்திலாவது என் வெற்றி பாதையில் என்னை வழி நடத்தியதில் தோனிக்கும் சிறுபங்கு உண்டு என தெரிவித்திருக்கலாமே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader