IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தோனியின் 5வயது மகளுக்கு பாலியல் மிரட்டல்! போலீசார் விசாரணை

Get real time updates directly on you device, subscribe now.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் 5வயது மகளுக்கு சமூக வலைதளங்களில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 2020 ஐபிஎல் சீசன் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தமுறை போட்டி இந்தியாவில் நடைபெறாமல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கீய அரபு அமீரகத்தில் பார்வையாளர்களினின்றி நடைபெற்று வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசன் போட்டியில் 3முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டியில் 2 முறை மட்டுமே வெற்றி பெற்று 4முறை தோல்வியை தழுவியுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஐபிஎல் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு 5வது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மற்ற 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

குறிப்பாக சென்னை அணி மற்ற அணிகளுடன் விளையாடிய போட்டிகளில் வெற்றியின் விளிம்புவரை சென்று கடைசியில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.குறிப்பாக சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சரி இல்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகளில் எம்எஸ் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் சமூக வலைதளங்களில் விஷகிருமிகள் சிலர் தோனி மற்றும் அவரது மகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மிரட்டல் விடுத்துள்ளனர்.

குறிப்பாக தோனி ஒழுங்காக விளையாடவில்லை என்றால் தோனியின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader