IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சாதனைகள் புரிந்த எம்.பி. வசந்தகுமாரின் வாழ்க்கை வெற்றிப்பாதை

Get real time updates directly on you device, subscribe now.

* மறைந்த வசந்தகுமார் எம்.பி. தொழில் மற்றும் அரசியலில் பல சாதனைகளைப் புரிந்தவர்.

* நாகர்கோயில் அகத்தீஸ்வரத்தில் 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார்.

* தந்தை ஹரிகிருஷ்ணன் நாடார் – தாயார் தங்கம்மை.

* பள்ளி, கல்லூரி படிப்பை முடித்ததும் தனது அண்ணன் குமரிஅனந்தனின் தேர்தல் பணிக்காக சென்னை வந்தார்.

* 1971ம் ஆண்டு வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராக சேர்ந்தவர், தனது திறமையால் மேனேஜர் பதவிக்கு முன்னேறினார்.

* ஆரம்ப காலத்தில் சைக்கிளில் வீடு, வீடாக சென்று பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்து வந்தார்.

* 5 ரூபாய் தவணை பணம் வசூலிக்க பல கிலோமீட்டர் தூரம் சைக்கிள் மிதித்துள்ளார்.

* எழுபதுகளிலேயே மாதத் தவணை திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.

* 1978ல் வசந்த் அன் கோ என்ற பெயரில் வீட்டு உபயோக விற்பனை கடைகளை தொடங்கினார்.

* வசந்த் அண்ட் கோ கடையில் விற்கப்பட்ட முதல் பொருள் 25 ரூபாய் மதிப்புள்ள மடிப்பு நாற்காலி.

* தனது பிராண்டுக்கு தானே பிராண்ட் அம்பாசிடர் ஆகி வர்த்தகத்தைப் பெருக்கினார்.

* அயராத உழைப்பால் இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் என்ற பெருமையைப் பெற்றார்.

* தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 90க்கும் அதிகமான கிளைகளை ஆரம்பித்தார்.

Intellectual Property Protection | Trade Marks

* ஊழியர்களால் அண்ணாச்சி என்று அன்போடு அழைக்கப்படும் இவர், 3000க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளார்.

* யாரிடமும் வேலை செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் என்று பேட்டிகளில் அடிக்கடி சொல்வார்.

* ஒரு ரூபாய் கூட இல்லாமல் தொழில் தொடங்கி, உழைப்பின் மூலம் பலகோடிகளுக்கு அதிபதி ஆகியிருக்கிறேன் என்று கூறி இளைஞர்களை ஊக்குவிப்பார்.

* பிரபல தொழில் அதிபர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத் திறமைக்கு சொந்தக்காரர்.

* வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறியது தொடர்பாக ‘வெற்றிக் கொடிகட்டு’ என்ற தலைப்பில் சுயசரிதையும் எழுதியுள்ளார்.

* தனது டி.வி.யில் வெளிச்சம் என்ற பெயரில் தன்னம்பிக்கை சொற்பொழிவு ஆற்றுவார்.

* பெருந்தலைவர் காமராஜர் மீதான பற்றுதலால் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்தார்.

* காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

* 2006 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

* தொழிலில் வெளிப்படைத்தன்மை கொண்ட வசந்தகுமார், தனக்கு ரூ.600 கோடி சொத்து இருக்கிறது என்று தேர்தல் கமிஷனிடம் வெளிப்படையாகச் சொல்லி தேர்தலை சந்தித்தார்.

* 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்.பி. ஆனார்.

* நாடாளுமன்றத்தில் அதிக கேள்விகளை எழுப்பிய எம்.பி. என்ற பாராட்டை பெற்றவர்.

* சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சமூக சேவைகளுக்கு பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்.

* ஏழை மாணவர்களுக்கு இலவச டியூசன் மையங்களை அமைத்துக் கொடுத்துள்ளார்.

* கிராமப்புற மக்களின் முன்னேற்றத்துக்கும், விவசாயத்துக்கும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்.

* நடைபாதை வியாபாரிகளுக்காக வட்டியில்லா கடன் திட்டத்தையும் தொடங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர்.

* 2008ம் ஆண்டு வசந்த் டி.வி.யை ஆரம்பித்து, அதில் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தி வந்தார்.

* இவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்பட 6 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உள்ளார்கள்.

* இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், விஜய் வசந்த், வினோத்குமார் ஆகிய 2 மகன்களும், தங்கமலர் என்ற மகளும் உள்ளனர்.

* விஜய் வசந்த் திரைப்பட நடிகர் ஆவார். சென்னை-28, நாடோடிகள் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

* தெலுங்கானா ஆளுனர் தமிழிசை செளந்திரராஜன் இவரது அண்ணன் மகள் ஆவார்.

* வச்ந்தகுமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், பல மாநில முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* முதல் தலைமுறை தொழிலதிபராக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ரோல் மாடலாக இருந்தார் அண்ணாச்சி.

* அண்ணாச்சி மறைந்தாலும் அவரது நிறுவனமும், அவர் ஆற்றிய தொண்டும் மக்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader