IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

எம்.பி. கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி

Get real time updates directly on you device, subscribe now.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

கொரோனாவால் பல எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தொற்றிற்கு ஆளாகி குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இன்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், “தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் உள்ளேன்” என கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் மருத்தவ ஆலோசனைப் பெற்று விதிகளை பின்பற்றி நடக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader