IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தமிழகம் முழுவதும் நடமாடும் ரேசன் கடைகள் – முதல்வர் தொடக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகம் முழுவதும் வருகின்ற செப்டம்பர் 21ம் தேதி 3501 நடமாடும் நியாய விலைக்கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்கப் பட இருப்பதாக தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில், அதற்கான தொடக்க விழா 21ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா ரேசன் கடைகளை திறக்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு இதன் மூலம் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவர் என்று தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அம்மா உணவகம் மக்கள் மத்தியில் அமுாக வரவேற்ப்பைப் பெற்றுள்ள நிலையில் இந்த நடமாடும் நியாய விலைகடைகள் நல்ல வரவேற்ப்பை பெறும் என அரசு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வரும் 21ந்தேதி நடமாடும் ரேசன் கடைகளை திறக்கப்படும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader