IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா பலியானவர்களில் இந்தியர்களே அதிகம் – இங்கிலாந்தில் அதிர்ச்சி தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் உயிர்பலியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு ஆஸ்பத்திரிகளில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை, கடந்த 17-ந்தேதி நிலவரப்படி, 13 ஆயிரத்து 918 ஆகும். அவர்களில் இனவாரியான புள்ளிவிவரங்களை இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இவர்களில் 16.2 சதவீதம்பேர், சிறுபான்மையினர் ஆவர். இவர்களில் அதிகபட்சமாக 3 சதவீதம்பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர்.

அடுத்தபடியாக, 2.9 சதவீத கரீபியன் நாட்டினரும், 2.1 சதவீத பாகிஸ்தானியரும், 1.9 சதவீத ஆப்பிரிக்கர்களும், 0.4 சதவீத சீனர்களும், 0.6 சதவீத வங்க தேசத்தினரும், 0.9 சதவீத இதர கருப்பின பின்னணி கொண்டவர்களும், 1.9 சதவீத இதர ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader