IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா அச்சமின்றி மசூதிகள் திறப்பு

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொரோனா வைரஸ் பயமின்றி சவுதி அரேபியா மற்றும் ஜெருசலேம் ஆகிய நாடுகளில் 2 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த மசூதிகள் வழிபாட்டிற்காக இன்று திறக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் வழிபாட்டுத்தலங்கள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியிலிருந்து சவுதி மற்றும் ஜெருசலேம் நாடுகளில் மசூதிகள் மூடப்பட்டன.

கடந்த இரண்டு மாத காலத்திற்கு பின்னர் சவுதியில் உள்ள 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மசூதிகள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் புனிததலமான மெக்காவில் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சவுதி அரசின் இஸ்லாமிய விவகாரத்துறை அனைத்து மொழிகளிலும் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தகவல்கள் அனுப்பி உள்ளன. அதில் வழிபாட்டு தலங்ககளில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளிவிட வேண்டும். முகமூடி அணிந்திருக்க வேண்டும். என்பன உள்ளிட்ட விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

மேலும் மெக்காவைத் தொடர்ந்து ஜுலை மாதம் வரை மூடியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக சவுதியின் மூத்த அதிகாரி ஒருவர் ஹஜ் பயணத்திற்கு திட்டமிட வேண்டாம் என புனித பயணாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் மதீனாவில் உள்ள மசூதி பொதுமக்களுக்காக ஒரளவு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader