IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன ? மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார்.

தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பொதுமுடக்கம் நீட்டிப்பு, மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் குழுவை சந்திக்க உள்ளார். மேலும் கொரோனா அதிகரித்து வரும் சூழலில், அதனை எவ்வாறு கையாள்வது மற்றும் மருத்துவ வசதிகளை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என தெரிய வருகிறது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader