Home கட்டுரை சுவாரஸ்யங்கள் நிறைந்த பிலிப்பைன்ஸ் பற்றிய தகவல்கள்

சுவாரஸ்யங்கள் நிறைந்த பிலிப்பைன்ஸ் பற்றிய தகவல்கள்

0

தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் பிலிப்பைன்ஸ் ஒரு நாடு என்றாலும் இது ஒரு மிகப்பெரிய தீவு கூட்டமாகும். மேலும் இது உலகத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது தீவு கூட்டமாகும்.

பிலிப்பைன்ஸில் மொத்தம் 7500 தீவுகள் உள்ளன. இவற்றில் 2000 தீவுகள் மட்டுமே. பயன்படுத்தப்படுகின்றன. மீதம் 5500 தீவுகளுக்கு பெயரே இன்னும் வைக்கவில்லை.

பிலிப்பைன்ஸில் மொத்தம் 175 மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் தற்போது வரை 171 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகவும் அதிகமாக பேசப்படுவது பிலிப்பைனோ.

பிலிப்பைன்ஸில் ஆட்சி மொழியும் இவைதான். தற்போது அங்கு பிலிப்பைனோவிற்கு நிகராக ஆங்கில மொழியும் பேசப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்ஸில் மற்றொரு சிறப்பு என்னவெனில் அங்கு வாழும் 10 கோடிமக்களில் 11 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதிலும் உலகத்திலேயே அதிகளவிலான செவிலியர்கள் பணிபுரிவதில் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்கள் தான் அதிகம்.

உலகளவில் கணக்கெடுத்து பார்த்ததில் மொத்த அளவில் செவிலியர்கள் பணிபுரிவதில் 25 சதவீதம் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் தான்.

இந்தியாவில் கிரிக்கெட் எவ்வளவு பிரபலமோ அந்தளவிற்கு பிலிப்பைன்ஸில் கூடைப்பந்தாட்டம் மிகவும் சிறப்பானவை ஒன்று. அதிலும் தெருவுக்கு தெரு கூடைப்பந்தாட்ட மேடை அமைக்கப்பட்டிருக்கும்.

உலகத்திலேயே மற்ற நாடுகளை விட பிலிப்பைன்ஸில் தான் அதிகளவு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக வருடத்திற்கு 19.5 பில்லியன் அளவிற்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிலிப்பைன்ஸில் தேங்காய் பெயர் புக்கோ.

தென்கிழக்கு ஆசிய நாடுகளை பொறுத்தவரை புத்த மதத்தினரை பின்பற்றுகின்றனர். ஆனால் பிலிப்பைன்ஸில் ஏசு கிறிஸ்துவை தான் பின்பற்றுகின்றனர்.

பிலிப்பைன்ஸில் மொத்தம் 90 சதவீதத்தினர் ஏசு கிறிஸ்துவை பின்பற்றுகின்றனர். ஸ்பெயின் ஆதிக்கத்தில் நீண்டகாலம் இருந்ததினால் ஏசு கிறிஸ்துவிற்கு மாறியதாக வரலாறு தெரிவிக்கின்றது.

பிலிப்பைன்ஸ் நாட்டினர் குடும்பத்தினர்களுடன் வாழவே விரும்புகின்றனர். ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் பிலிப்பைன்ஸில் ஒரு நாளைக்கு 400 மில்லியன் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்கிறார்களாம்.

உலகத்திலேயே மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நாடு என சாதனை படைத்திருப்பது பிலிப்பைன்ஸின் தலைநகரம் மணிலா தான். அதாவது அங்கு மொத்தம் 24 மைல் மட்டும் தான் இடமே.

ஆனால் அங்கு 16 லட்சத்து 60 ஆயிரம் குடும்பங்கள் அங்கு வாழ்கின்றனர். அதனால் அங்கு எப்பொழுதுமே சாலை போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

பிலிப்பைன்ஸில் உள்ள பலாவன் தீவு தான் உலகத்திலேயே மிகவும் அழகான தீவு என சாதனை படைத்துள்ளது. அங்கு இருக்கும் பவளப் பாறைகள் மற்றும் வெள்ளை நிறத்திலான பீச் மணல், சிறந்த ஸ்கூபா டைவிங் இங்குதான் உள்ளது.

பிலிப்பைன்ஸில் தூங்கிக் கொண்டிருக்கும் எரிமலைகள் அதிகம். 1991ல் தலைநகர் மணிலாவிற்கு பக்கத்தில் உள்ள பினாடுபோ என்ற எரிமலை வெடித்தது.

கிட்டத்தட்ட 25 கி.மீ உயரத்திற்கு எரிமலை வெடித்து குழம்பாக சிதறியது. கிட்டத்தட்ட 20 பில்லியன் டன் விஷ சல்ஃபர் டை ஆச்கைடு வெளியேறியதால் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.

பிலிப்பைன்ஸில் மிகப்பெரிய பொது போக்குவரத்து என்னவெனில் அது ஜுப் தான். இரண்டாவது உலகப்போருக்கு பின் அமெரிக்க விட்டுச் சென்ற பல்லாயிரக்கணக்கான ஜுப்களிலிருந்து இந்த ஜுப்னேவினை தயாரித்துள்ளனர்.

அதன்பிறது அது அப்படியே தொடர ஆரம்பித்தது. 18 பேர் வரை பயணிக்கும் ஜப்வேயில் செல்வது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

Exit mobile version