Home கட்டுரை விலை மதிப்புமிக்க செராமிக் பற்றிய ஆச்சரிய தகவல்

விலை மதிப்புமிக்க செராமிக் பற்றிய ஆச்சரிய தகவல்

0

செராமிக் தமிழில் பீங்கான் மற்றும் பித்தாங்கள் என அழைக்கப்படுகிறது. உடனடியாக செராமிக்கை செய்துவிட முடியாது. அதற்கான நேரமும் அதிகமாகும்.

அதேப்போன்று வேலை பழுவும் அதிகமாகும். இதன் வேலை அதிகமான செய்வதனால் தான் இது அழகாக காணப்படுகிறது.

தற்போது செராமிக் பயன்பாடு காபி கப் முதல் அழங்கார பொருட்களை வரை செராமிக்கினால் செய்யப்பட்டு வருகிறது.

களிமண்ணுடன் சேர்த்து அலுமினியம் ஆக்சைடு டங்க்ஸ்னைடு கார்ப்பட் மற்றும் சில வேதிப்பொருட்கள் கலந்து அதிகநேரம் வெப்பமூட்டி மற்றும் அதிகநேரம் குளிரவைத்து தான் செராமிக் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

 

களிமண் பொருட்களை போன்றுதான் செராமிக் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கடைசியில் கிளேஸ் என்ற வாட்டர் ப்ரூஃப் பெயிண்டை அதன்மேல் சேர்ப்பதனால் தான் செராமிக் பொருட்களுக்கான ஒளிரும் தன்மை வெளிப்படுகின்றன.

செராமிக் என்ற வார்த்தையின் ஆரம்பம் என்பது கிரேக்கத்திலிருந்து வந்தவை. அங்கு கிரேமிக்கோ என அழைக்கப்பட்டனர். அதன் பொருள் என்பது பளபளக்கும் களிமண் பாண்டம் என்பதாகும்.

இந்த உலகத்திலேயே மிகவும் பழமையான செராமிக் பொருட்களை செக் குடியரசில் கண்டுபிடித்துள்ளனர். இதன் வயது கிமு 28 ஆயிரம் ஆகும். அப்பொழுது அதில் ஒர பெண்ணில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

 

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே செராமிக் பொருட்களை பயன்படுத்தியிருந்தாலும் வீட்டை அழகுப்படுத்தும் செராமிக் பொருட்களை கொண்டு வரலாம் என முதன்முதலில் கண்டுபிடித்தது சீனா.

கிமு 18 ஆயிரம் ஆண்டில் இதற்கான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். அதன்பிறகு கண்டுபிடித்தும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.

முதன்முதலில் செராமிக் பொருட்களை தயாரித்து பயன்படுத்தி வந்த நாடு சீனா தான். ஆனால் அதன் சூத்திரம் கிமு 14000 ஆண்டில் ஜப்பானிற்கு சென்று இந்த மாதிரியான செராமிக் பொருட்களை தயாரிக்கலாம் என கண்டுபிடித்து உலகம் முழுவதும் பரப்பினர்.

 

முன்பு ஒரு செராமிக் பொருட்களை தயாரிக்க ஒரு வாரத்திற்கும் மேல் நாளாகி வந்தது. அந்த அதிகநாள் இடைவெளியே குறைப்பதற்காக கிமு 3000ம் ஆண்டில் ஒரு வீலை கண்டுபிடித்து விரைவில் செராமிக் பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தனர். இதனை கண்டுபிடித்ததும் சீனா தான்.

செராமிக் பொருட்கள் மீது புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெயிண்டிங் பண்ணும் நுட்பத்தை சீனாவில் பௌலியா எனும் பகுதியில் கிபி 206ல் கண்டுபிடித்தனர். அந்த தொழில்நுட்பத்திற்கான பெயர் ஃபோர்ஸ்லைன்.

அதற்கு பிறகு தான் வித்தியாசமான பெயிண்டிங்கை வரைந்து சந்தையில் அறிமுகப்படுத்தி விற்கத் தொடங்கினர்.

 

பாரம்பரியமாக தயாரிக்கின்ற செராமிக் பொருட்களை தயாரிப்பதற்கான நேரம் அதிகமாகும். அதன்பிறகு செய்து முடித்தவுடன் அதன்மேல் வரையக்கூடிய பெயிண்டிற்குமான நேரமும் அதிகமாகும். அதனாலேயே அதன் மதிப்பு அதிகமாக இருந்தது.

எனவே அந்த காலகட்டத்தில் பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள் மட்டும் தான் செராமிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

19ம் நூற்றாண்டில் தான் அனைவரும் பயன்படுத்தக்கூடிய செராமிக் பொருட்களை தயாரித்து பயன்படுத்தத் தொடங்கினர்.

இதற்கு பிறகு பாரம்பரியமாக செய்யக்கூடிய வேலைப்பாடுகளை நிறுத்திவிட்டு கெமிக்கல் அதிகம் பயன்படுத்தி விலை மலிவான செராமிக் பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தனர். அதனால் தான் அனைத்து தர மக்களினரும் வாங்கி பயன்படுத்த முடிந்தது.

 

செராமிக்கை வைத்து பொருட்கள் மற்றும் தயாரிக்காமல் தற்போது நிறைய தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக ஸ்பேஸ், ஆட்டோ மொபைல்ஸ் மற்றும் மொபைல்ஸ், லேப்டாப் என பலவகையான தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக நாசாவில் அவர்கள் அனுப்பும் ஒவ்வொரு ஸ்பேஸிலும் 34000 செராமிக் டைல்ஸ் மற்றும் கோட்டிங் அப்ளை செய்து அனுப்புகின்றனர்.

Exit mobile version