மூக்குத்தி அம்மனில் எதற்காக ஆர்.ஜே.பாலாஜியை மனோபாலா எச்சரித்தார்?

Get real time updates directly on you device, subscribe now.

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் சக்கை போடு போடுகிறது. படம் தியேட்டரில் வெளியாகியிருந்தால், பெரிய சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும். ஆனால் நல்ல வேளையாக கொரோனா செய்த புண்ணியத்தில், ஆன்லைனில் வெளியாகி இதுவரையில் எந்த சிக்கலும் இல்லாமல் ஸ்மூத்தா போயிட்டு இருக்கு.

படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை வைத்தே ஆர்.ஜே பாலாஜி நல்லா கேம் விளையாடி இருக்காரு. “கடவுள் இல்லைன்னு சொல்றவனை கூட நம்பலாம். நான் தான் கடவுள்னு சொல்றான் பாரு, அவனை நம்பக்கூடாது” என்கிற மாதிரியான வசனங்கள் ஒரு மதத்தை டார்கெட் செய்வது போல இருந்தது.

அதே மாதிரி, “ஒரு மதத்தை ஏற்றி, இன்னொரு மதத்தை தாழ்த்துவது” பற்றியுமான வசனங்கள் இருந்ததால், எல்லா மதத்திலும், கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கோல்மால் வேலைகளை வெளிச்சம் போட்டு காட்டுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். அது போலவே முதலில் வெளியான ஸ்னீக் பீக் வீடியோவில் சாமியார்கள் செய்யும் அட்டூழியங்கள் குறித்தும், பகுத்தறிவு பற்றாளர்கள் குறித்தும் பேசப்படுவது போல காட்சிகள் வெளியிடப்பட்டது.

பிறகு இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோவில், பாஸ்டர் பெயரில், சி.டியை வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டம் குறித்த காட்சிகள் வெளியானது. அந்த சீனுக்காக படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு வந்தது. ஆனால் படத்தில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த காட்சியில் நடிக்கும் போதே, “இந்த சீன் எல்லாம் ஸ்கிரீனில் வராது பாலாஜி” என்று மனோ பாலா எச்சரித்து இருக்கிறார். இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி சர்ச்சையான அந்த காட்சிகளை வைத்தே பைசா செலவில்லாமல் படத்திற்கு மார்கெட் தேடிக்கொண்டார் பாலாஜி.

நீக்கப்பட்ட காட்சிகளை முன்னோட்டமாக வெளியிட்டு, அந்த காட்சிகள் படத்தில் வராமல் போனதால் மக்களிடம் ஒரு பரபரப்பு உண்டாகி, அதன் மூலம் சர்ச்சை உருவானதால், சோஷியல் மீடியா வைரல் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.

படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை வைத்தே, அதனை பிரபலப்படுத்திக் கொண்ட நுணுக்கத்தை தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஆர்.ஜே பாலாஜி கையாண்டுள்ளார். அது நல்லா வெர்க்அவுட்டும் ஆயிருக்கு. அடுத்து என்ன? இன்னொரு ஸ்ட்ராங்கான கதை ரெடி பண்ண போயாச்சாம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More