IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொரனோ குறித்து பிரதமர் மோடியின் இரண்டாவது உரை! முழுமையான தகவல்கள்

99

கொரனோ தடுப்பு குறித்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு மற்றும் ஊரடங்கு உத்தரவு குறித்து உரையாற்றினார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க கடந்த ஞாயிறன்று மக்கள் அனைவரும் ஜனதா ஊரடங்கை கடைபிடித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

கொரோனா நோய் தோற்று வேகமாக பரவி வருகிறது. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் சவாலாக உள்ளது. கொரோனாவை தடுக்க பெரியவர்கள், வியாபாரிகள் என அனைவரும் இணைந்து போராட வேண்டும்.

கொரோனாவை தடுக்க ஒரே வழி சமூக தனிமைப்படுத்தல் மட்டுமே. ஜனதா ஊரடங்கு போதுமானதாக இல்லை. ஏற்கனவே பல்வேறு பகுதிகள் மாநில அரசுகளால் முடக்கப்பட்டுள்ளன. இது இன்று நள்ளிரவு 12 முதல் நாடு முழுவதும் முடக்கப்படும்.

கொரோனாவை தடுக்க இது மட்டுமே சரியான வழியாகும். இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 அடுத்த நாட்களுக்கு நாடு முழுவதும் இந்த அமலில் இருக்கும். 21 நாட்கள் கஷ்டப்படாமல் நமக்காகவும் நமது குடும்பத்திற்காகவும் இருந்து கொள்ளுங்கள்.

மருத்துவர்களின் அறிவுரைபடி அடுத்த 21 நாட்களுக்கு சமூக தனிமைப்படுதலை மேற்கொண்டு கொரோனாவை விரட்டியடிப்போம்.

Related Posts
1 of 7

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கானவர்களை பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 21 நாட்கள் தனித்திருந்தால் மட்டுமே கொரோனா தொற்று சங்கிலியை உடைத்தெறிய முடியும்.

சிறந்த சுகாதார முறைகளை கொண்ட நாடுகளால் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே லட்சுமண ரேகை போல 21 நாட்கள் சமூக தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுங்கள்.

அடுத்த கட்டத்திற்கு இந்தியா வளர தற்போது கடைபிடித்தே ஆக வேண்டும். உங்கள் அனைவரையும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்.

அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தங்குதடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். ஏழை எளிய மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் வரும் 21 நாட்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் கொரோனாவை அழிக்க அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி உரையாற்றினார்.