IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

செல்போன் திருடர்களுக்கான ஆப்பு ரெடி – எச்சரிக்கை அலார்ட்

0


தொலைந்த மற்றும் திருடு போன செல்போன்களை கண்டறிய மத்திய அரசு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தை மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகாராஷ்டிராவில் அறிமுகம் செய்தார்.


சமீபநாட்களாக செல்போன் திருட்டு அதிகமாகிக் கொண்டே இருப்பதால் அதை தடுக்க அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தொலைத்த அல்லது திருடு போன செல்போனின் தகவல்களை இணையதளத்தில் கொடுக்கும் போது அதை கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.


இந்தசேவையை மகாராஷ்டிர அரசு 2017முதல் வழங்கி வருகிறது. ஆனால் மத்திய அரசு தற்போதுதான் தொடங்கியுள்ளது. இதற்காக மத்திய கருவி அடையாளப் பதிவேடு (சிஇஐஆர்) என்ற பெயரில் கோடிக்கணக்கான செல்போன்களின் ஐஎம்இஐ எண்கள் அடங்கிய தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.


திருடு போன அல்லது தொலைந்த போன்களை எடுத்தவர் உபயோகிக்கும்போது ஐஎம்இஐ எண் மூலம் இந்த இணையதளத்தில் எளிதில் கண்டறிய முடியும். முதலில் தொலைந்த செல்போன் குறித்து போலீஸில் புகார் தெரிவிக்க வேண்டும்.


பின்னர் மத்திய தொலைத்தொடர்பு துறையை தொடர்புகொண்டு இணையதளத்தில் தொலைந்த செல்போன்விவரங்களை பதிவிட வேண்டும். இதற்காக 14422 டோல்ப்ரி எண் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட செல்போனின் ஐஎம்இஐ எண் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படும். இதன்மூலம் திருடுபோன செல்போன் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.


திருடுபோன செல்போனை திருடியவர் விற்கும்போது அவர்எளிதில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். மத்திய அரசு இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட போலீசாருக்கும் தகவல் அனுப்பி செல்போனை எடுத்தவர் அல்லது திருடியவர் சிக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.


இந்த வசதியை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
#MobileTheft #14422 #In4Net #IMEI