IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அப்டி போடு அருவாள…! முதல்வரின் வெளிநாட்டுப்பயணம் பற்றி ஸ்டாலின் புது விளக்கம்!

21


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணத்திற்கு புதிய விளக்கம் ஒன்றை திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் அரசுமுறைப் பயணமாக 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக லண்டன் சென்றார். அங்கு மருத்துவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் செப்டம்பர் 1ம்தேதி அமெரிக்கா சென்றார். வருகிற 7ம்தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் முதல்வர்.


இதற்கிடையில் சேலத்தில் விரைவில் அமையவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம் குறித்து அறிவதற்காக பல்வேறு அமெரிக்க கால்நடை பண்ணைகளுக்கு செல்ல முதல்வர் திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக நியூயார்க் மாகாணம் பஃப்பலோ நகரிலுள்ள ‘லாம்ப்ஸ்’ கால்நடைப் பண்ணைக்குச் சென்றார். அங்கு மேற்கொள்ளப்படும் உயர் தொழில்நுட்ப கால்நடை வளர்ப்பு குறித்து விசாரித்தார். தொழில்நுட்பங்கள் குறித்து, லாம்ப்ஸ் கால்நடைப் பண்ணை அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விளக்கிச் சொன்னார்கள்.


முதல்வருடன் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயக்குமார், எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் கோபால் ஆகியோரும் இருந்தனர். பஃபலோவைப் போன்று, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கால்நடைப் பண்ணைகளையும் பார்வையிட முதல்வர் திட்டமிட்டுள்ளார்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்து வரும் நிலையில், அவரது பயணம் குறித்து புதிய தகவல் ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் கூறுகையில், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த இரண்டு முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டேன், இதுவரை வெளியிடவில்லை. இந்த சூழலில் தான் முதல்வர், அமைச்சர்கள் வெளிநாடு சென்றிருக்கிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளார்