IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மு.க.ஸ்டாலின்

Get real time updates directly on you device, subscribe now.

1953 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கலைஞர் மு.கருணாநிதி – தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார் தளபதி என எல்லோராலும் அழைக்கப்படும் மு.க. ஸ்டாலின். ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் அவரது தந்தை கலைஞர் மு கருணாநிதி. தளபதி உடன் பிறந்தோர், முத்து, அழகிரி, செல்வி, தமிழரசு மற்றும் கனிமொழி.

கல்வி

தளபதி ஸ்டாலின், சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்த பொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி மேலாண்மை மறுத்தது. இதனால் சென்னை சேத்துப்பட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.

1967-1968 ஆண்டுகளில் தளபதி மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு “கோபாலபுரம் இளைஞர் திமுக” என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு சமூகப்பணிகளை செய்து வந்தார்.

1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.முக.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக்கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞரிடம் வழங்கினார். 1973ம் ஆண்டு திமுக-வின் பொதுக்குழு உறுப்பினரானார்.

கலை – கழகம்

தந்தையின் அரசியல் – கலை ஆளுமை காரணமாக, தளபதி ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் இருந்தது. அவர் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய “முரசே முழங்கு” என்ற நாடகமாகும். இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது.

இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின். அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும்.

திரைப்படம்

தளபதி ஸ்டாலின் அவர்கள் சமூக நலக் கருத்துக்களை வலியுறுத்தும் சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஒரே ரத்தம்(1988), மக்கள் ஆணையிட்டால்(1988), குறிஞ்சி மலர்(நெடுந்தொடர்) ஆகிய படைப்புகளில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader