முதல்வர் பழனிச்சாமியின் தாயார் மறைவு! நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

Get real time updates directly on you device, subscribe now.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவையொட்டி மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த அக்டோபர் 12ம் தேதி காலமானார். முதல்வர் பழனிச்சாமி ஏற்கனவே திட்டமிட்டிருந்த நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஊர்களுக்கான அரசுமுறை பயணத்தை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்திற்கு சென்றார்.

சிலுவம்பாளையத்தில் அவரது தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றார். பின்பு காரிய நிகழ்விலும் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி அதனை முடித்துக் கொண்டு, நேற்று மாலை 6.05 மணிக்கு சிலுவம்பாளையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இரவு 9.20 மணிக்கு அவர் சென்னை வந்தடைந்தார்.

#mkstalin #admk #dmk #in4net

இந்நிலையில் இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் உள்ள முதல்வர் பழனிச்சாமி வீட்டில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரின் மறைவிற்கு ஆறுதல் கூறினார்.

https://twitter.com/CMOTamilNadu/status/1318088258484498434

பின்பு முதலமைச்சர் தாயாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் இணைந்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், மற்றும் துணை பொதுச்செயலாளர் பொன்முடியும் ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினர்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More