IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திருமண விழாவில் மணமகனின் பெயரை மாற்றி உளறிக் கொட்டிய மு.க.ஸ்டாலின் !

Get real time updates directly on you device, subscribe now.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண விழாவில் மணமகனின் பெயரை மாற்றி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிமலை என்ற கிராமத்தில் திமுக பிரமுகர் திருமண இல்ல விழா ஒன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். விழா மேடையில் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

காசி விஸ்வநாதன் – பொற்கொடி தம்பதியரின் மகன் சுப்பிரமணியனுக்கும், அடைக்கல காத்தான் – பூபதி ஆகியோரின் மகள் பிரதீபாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின் பெண்ணின் மாமனாரை (காசி விஸ்வநாதன்) மணமகன் என்று கூறி ஸ்டாலின் அழைத்ததால் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் அனைவரும் திடுக்கிட்டனர்.

சில நொடிகளில் தனது உளறல் பேச்சை உணர்ந்த ஸ்டாலின், சுதாரித்துக் கொண்டு சுப்பிரமணியன் என மணமகன் பெயரை கூறி சமாளித்தார். விழாவில் பேசி முடிப்பதற்குள் மூன்று இடங்களில் இதுபோல தடுமாறி பேசியுள்ளனர்.

பொதுவாக அரசியல் தலைவர்கள் திருமண விழா, கட்சி விழா ஆகிய இடங்களில் இதுபோன்று தவறாக உச்சரித்து பேசுவது என்பது வழக்கமானது என்றாலும், திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி உளறிக் கொட்டி பேசி வருவது கட்சித் தொண்டர்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader