IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மிஸ்டுகாலை வச்சே கோடிக்கணக்குல சம்பாதிக்குதாம் ஜியோ! ஏர்டெல் அதிரடி புகார்

8


வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்த ஜியோ நிறுவனத்தின் மீது ஏர்டெல் நிறுவனம் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளது.


முன்னொரு காலத்திலிருந்து தற்போது வரை செல்போன் உபயோகம் அதிகரிப்பதற்கு ஓர் முக்கிய காரணம் ரிலையன்ஸ் மற்றும் அதன் சலுகைகளே. ஆம் ரூ.501க்கு செல்போன் அறிமுகம் செய்து வீடியோ, படம், வாய்ஸ் கால் என எண்ணற்ற சலுகைகள் கொடுத்து வாடிக்கையார்களை வெகு ஈசியாக ரிலையன்ஸ் நிறுவனம் கவர்ந்தன. இதன் தொடர்ச்சி தற்போது ஜியோ நெட்வோர்க் மூலம் ஸ்மார்ட் போனிலும் தொடர்கின்றன.


அன்லிமிடெட் கால்வசதி, மெசெஜ் மற்றும் தினம்தோறும் 1.5 ஜிபி டேட்டா இலவசம் போன்ற எண்ணற்ற சலுகைகள் அறிவித்தவுடன் அதன் போட்டி நிறுவனங்கள் சற்று சறுக்க ஆரம்பித்தன. இருப்பினும் ஜியோ அளவிற்கு மற்ற நிறுவனங்களும் சலுகைகள் அறிவித்தாலும் ஜியோ அளவிற்கு வாடிக்கையாளர்களை கவர முடியவில்லை என்பதுதான் வேடிக்கையான விஷயம். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் ஜியோ நெட்வோர்க் மீது ஏர்டெல் நிறுவனம் ஒரு பகிரங்க குற்றச்சாட்டை அறிவித்துள்ளது.


அதன்படி வாடிக்கையாளர்கள் கால் செய்யும் போது `ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்து ஜியோ மோசடி செய்துவருவதாக ஏர்டெல் நிறுவனம் புகார் அளித்துள்ளது. அதன்படி தொலைபேசி அழைப்பின் போது வரும் ‘ரிங்’ ஆகும் நேரத்தை ஜியோ நிறுவனம் 20 நொடிகளாக குறைத்து மோசடியில் ஈடுபடுவதாக ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய டெலிகாம் விதிப்படி 45 நொடிகள் ரிங் ஆக வேண்டும் என்ற விதிமுறையை ஜியோ பின்பற்றவில்லை.


இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளாவது, இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சராசரியாக 45 நொடிகளுக்கு போன் ரிங்கிங் நேரத்தை வைத்திருக்கும் போது ஜியோ நிறுவனம் மட்டும் வெறும் 20 நொடிகள் ரிங் நேரத்தை நடைமுறையில் வைத்துள்ளது. இதனால் அழைப்பை ஏற்கும் முன்னரே வாடிக்கையாளர்கள் மிஸ்டுகால் பெறுகின்றனர். இது செயற்கையாக அவுட்கோயிங் அழைப்புகள், இன்கம்மிங் அழைப்பாக மாற்றப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.


உதாரணமாக ஏர்டெல் நெட்வொர்க்கிலிருந்து ஜியோ வாடிக்கையாளர் ஒருவருக்கு கால் செய்தால் அது அவருக்கு வெறும் 20 நொடிகள் மட்டுமே ரிங் ஆகும். இந்த குறைவான அழைப்பு விடுக்கும் வசதியால் 30 சதவீதம் பேர் மிஸ்டுகால் பெறுவார்கள். இப்போது மிஸ்டுகால்களைப் பார்த்த ஜியோ வாடிக்கையாளர் ஏர்டெல் வாடிக்கையாளருக்கு கால் செய்வார். இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு அவுட்கோயிங் அழைப்பு தற்போது இன்கம்மிங் அழைப்பாக மாறும்.


இந்திய டெலிகாம் விதிகளின்படி இன்கம்மிங் அழைப்பு பெறும் நிறுவனம் எதிர் நிறுவனத்திற்கு IUC கட்டணமாக 6 பைசா கொடுக்க வேண்டும். இப்படி ஜியோ தளத்தில் பதிவாகும் 25 முதல் 30 சதவீத மிஸ்டு கால்களின் மூலம் செய்யப்படும் அழைப்புளால் 6 பைசா கட்டணத்தை ஜியோ பெறுகிறது. இதன் வாயிலாக ஜியோ தற்போது மொத்தம் 65 சதவீத டெலிகாம் டிராபிக்-ஐ தன் வசம் வைத்துள்ளது என ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டுகிறது
முகேஷ் அம்பானியின் சொத்து பட்டியல் வெளியீடு – இவர் தான் நம்பர் 1 பணக்காரர்


ஆனால் ஏர்டெல் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜியோ மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜியோ நிறுவனம் கூறுகையில், 30 நொடிகள் தான் இந்தியாவில் கடைப்பிடிக்கும் ஒன்று. உலகளவில் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் 15-20 நொடிகளுக்குத் தான் ரிங் நேரத்தை வைக்கின்றன. ஜியோ தளத்தில் வரும் அழைப்புகளில் 25-30 சதவீத அழைப்புகள் மிஸ்டுகால்கள் தான் என தெரிவித்துள்ளது.


ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 2019ம் வருடத்திற்காக இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர்கள் பட்டியலில் இவர் தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#JIO #Airtel #MissedCall #In4Net