IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மிஸ் டீன் சர்வதேச அழகு போட்டியில் முதன்முறையாக வென்ற இந்திய பெண்

67

உலகின் மிகப்பழமையான ‘மிஸ் டீன் சர்வதேச அழகுப் போட்டி” யில் இந்தியாவை சேர்ந்த 16 வயது பெண் 27 ஆண்டுகளில் முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளார். வதோதராவைச் சேர்ந்த ஆயுஷி தோலாகியா இந்தியாவுக்கான கிரீடம் வென்று சாதனை படைத்துள்ளார். 11ம் வகுப்பு மாணவியான இவர் பாரம்பரிய கதக் நடனத்தில் தேர்ச்சி பெற்றதுடன், இந்த ஆண்டு சிறந்த ஆடை விருதும், சிறந்த பேச்சாளர் விருதையும் வென்றுள்ளார்.

தனி நாடுகளாக இல்லாமல் ஒரே உலகம், ஒரே அரசாங்கம் என இருந்தால் இவ்வுலகம் சிறந்த இடமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு ‘ஒரே உலகம், ஒரே அரசாங்கம”; என இருந்தால் இவ்வுலகம் சிறந்த இடமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு நாடும் அவற்றின் புவியியல் பகுதி, மக்களின் பழக்க வழக்கம் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றில் பிரிக்கப்பட்டுள்ளன. உலகம் ஒரு குடும்பம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு அரசாங்கம் என்று பிரிந்திருந்தாலும், நாம் அனைவரும் ஒரே குடும்பம். அன்பும் அமைதியையும் கொண்டவர்கள் என்ற அவரது பதில் அனைவரையும் கவர்ந்தது.

மிஸ் டீன் சர்வதேச மகுடத்துக்காக 22 நாடுகள் போட்டியிட்டதில் பராகுவேவைச் சேர்ந்த யெசீனியா கார்சியா முதல் ரன்னர்-அப் ஆகவும், போட்ஸ்வானியாவைச் சேர்ந்த அனிசியா இரண்டாம் ரன்னர்-அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

#MissTeen #International #BeautyContest #Indian #woman #firsttime #Win