IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கள்ள ஒப்பனையுடன் ஏமாற்றும் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – சசிகலா புஷ்பா எம்.பி.

0 57

தன்னை மிசா தியாகி என்ற கள்ள ஒப்பனையுடன் ஏமாற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தானாக வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது முகத்திரை கிழிக்கப்படும் என சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை மிசா தியாகி என அடையாளப்படுத்தி கொண்டு 40 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் இருந்து வருகிறார். உண்மையில் அவர் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை, மிசா காலத்தில் வேறோர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

நிறைகுடங்கள் தளும்பாமல் இருக்கின்றன, ஆனால் இவர் என்னவோ துள்ளி கொண்டிருக்கிறார். பொய் வேடம் கலைந்து விட்டது, பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டாலின்!

திமுக தொண்டர்களையும் மக்களையும் இத்தனை காலமாக, மிசா வீரர் என்ற கள்ள ஒப்பனையுடன் ஏமாற்றி வந்த ஸ்டாலின், ஒப்பனை கலைக்கப்பட்டு விட்டதால் மன்னிப்பு கேட்க வேண்டும். வாய்மூடி மௌனிகளாக, இந்த நாடகத்திற்கு இத்தனை காலம் துணை நின்ற திமுக உயர்நிலை தலைவர்களுக்கு வெட்கமாயில்லையா?

மிசா கைதி என்ற இந்த அற்புத நாடகத்திற்கு காங்கிரஸும் துணை போகிறதா? பெருந்தலைவர் காமராஜர் மீது களங்கம் கற்பித்த திமுகவுடன் கூச்சமேயின்றி கூட்டணி வைத்து, திமுகவின் ஊதுகுழலாக மாறி விட்ட காங்கிரஸ், ஸ்டாலின் அரங்கேற்றிய இந்த கபட நாடகத்தை விமர்சிக்க தயாரா?

பொய்யும், புரட்டுமே வாடிக்கையாக்கி கொண்ட ஸ்டாலின், இன்று வேடிக்கை பொருளாகி நிற்கிறார். தயங்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும். முரண்பாடுகளின் மொத்த உருவம் ஸ்டாலின் என இனி வருங்கால வரலாறு வரவேற்கும். இந்த நரித்தன செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

தவறினால், இவரது கிழிந்த முகமூடிக்கும் இவருக்கும் பாடம் புகட்ட காத்திருக்கும் பொதுமக்களிடம் நேரில் சென்று, மேலும் மேலும் தோலுரிப்பேன். நாணங்கெட்ட அரசியல், மானங்கெட்ட செயல்பாடுகள் கிழிக்கப்படும் என்று சசிகலா புஷ்பா எம்.பி. அவர்கள் தெரிவித்துள்ளார்.