திருடுபோன பைக் கூரியரில் வந்த அதிசயம்!

Get real time updates directly on you device, subscribe now.

கோவை சூலூரிவ் திருடு போன பைக், கூரியரில் வந்த சம்பவம் பைக் உரிமையாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார், 34. இவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது பைக்கை கம்பெனி முன்பு நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக் காணாமல் போயிருந்தது. உடனே அங்கு இருந்த சிசிடிவி கேமராவை சோதித்து பார்த்தார். அப்போது தனது பைக்கை ஒரு இளைஞர் ஓட்டிச் செல்வதை சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து தனது பைக் திருடப்பட்டதை உறுதிப்படுத்திய சுரேஷ், அந்த நபர் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது பைக்கை திருடிச்சென்ற மர்ம நபர் அப்பகுதியில் டீ மாஸ்டராக இருந்தது தெரியவந்தது. ஆனால் அவரைப் பற்றிய வேறு எந்த தகவல்களும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று (மே 30) சூலூர் கூரியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், அவரது பெயருக்கு கூரியர் வந்துள்ளதாக கூறியதால், அங்கு சென்று பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

திருடுபோன தனது பைக் கூரியரில் வந்ததால் ஆச்சரியமடைந்த சுரேஷ், கூரியர் கட்டணத்தை செலுத்தி தனது பைக்கை எடுத்து வந்தார். திருடு போன பைக், கூரியரில் வந்த சம்பவம் சுரேஷிற்கு அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் தந்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader