IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முதல்வராகும் முக லட்சணமெல்லாம் அவருக்கு இல்லீங்க..! விஜயபாஸ்கர் தடாலடி

0 70

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வராகும் முக லட்சணம் அவருக்கு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு தான் முதல்வராகும் முக லட்சணம் இருக்கிறது. மு.க.ஸ்டாலினுக்கு அந்த யோகம் இல்லை. ஸ்டாலின் முக லட்சணத்திற்கு, செயற்கையாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாலும் வாய்ப்பில்லை.

ஏற்கனவே, ஸ்டாலினின் முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல் தான் உள்ளது என்று புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தடாலடி பேசியுள்ளார். இவரது பேச்சிற்கு திமுக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.