IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திமுக ஆட்சிகாலம் தான் தமிழகத்தின் இருண்ட காலம்! செல்லூர் ராஜு

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் திமுக ஆட்சிகாலம் இருண்ட காலம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு 100 யூனிட் இலவச மின்சாரம் அறித்து வருகிறோம் என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரையில் அதிமுகவின் 49ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பத்திரிக்கையாளர்களிடம் பேசினார் அவர் கூறியதாவது,

“நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் ஆணித்தரமாக அதிமுக அரசு இருக்கிறது. இதுவே திமுக அரசாக இருந்தால் நழுவி கொண்டு சென்றிருக்கும். மத்திய அரசுக்கு இணையான மாநில அரசின் பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

எங்களுக்கு போட்டி திமுக மட்டுமே, கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு எதிரிகள் இல்லை. பாரத பிரதமரின் நல்ல செயல்பாடுகளுடன், எங்களோட கூட்டணிக் கட்சி செயல்படுகிறது, அவர்களின் செயல்பாடு எங்களுக்கு பிடித்துள்ளது.

திமுக ஆட்சியில் தான் தமிழகம் மின்வெட்டால் இருண்டு கிடந்தாகவும் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார். மேலும் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே அதிமுக அரசு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக அர்சு வழங்கி வருகிறது.அதிமுக சொந்த காலில் நிற்கவே விரும்புகிறோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

#sellurraju #admk #admkminister #pressmeet #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader