IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கலைத்துறையில் சாதித்த ரஜினி, கமல் அரசியலில் காலாவதியானவர்கள் – அமைச்சர் உதயகுமார்

129


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசும் பேச்சுதான் அடுத்த 10 நாட்களுக்கு ஊடகங்களில் பேசப்படும் தலைப்பாகும். செய்திகள், கண்டனங்கள், விமர்சனங்கள் என ரஜினியின் பேட்டி எதுவாக இருந்தாலும் குறைந்தது 10 நாட்களுக்காவது அலசி ஆராய்ந்து பேசியபிறகு தான் அது அடங்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் அலுவலகத்தில் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, காவிச்சாயம், திருவள்ளுவர், தமிழக அரசியலில் வெற்றிடம் போன்ற கருத்துக்கள் தான் இன்னும் டிரெண்டிங்கில் உள்ளது.
அவரது பேச்சுக்கு தினம்தோறும் ஏதெனும் அரசியல் தலைவர்கள் ரஜினியின் பேட்டிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரது பேச்சுக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும் போது, ரஜினியும் கமல்ஹாசனும் கலைத்துறையில் 35 ஆண்டுகளாக இருந்து வருவது பாராட்டக்குரியது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அவர்கள் அரசியலில் காலாவதியாகிவிட்டனர்.

தமிழக அரசியலின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என மு.க.அழகிரி பேசிய கருத்திற்கு பதில் கூறிய அமைச்சர், தமிழக அரசியல் வெற்றிடத்தை ஏற்கனவே முதல்வர் பழனிச்சாமி நிரப்பிவிட்டார். வருகின்ற 2021ம் ஆண்டும் தமிழக முதல்வராக பழனிச்சாமி தான் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.