IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வெள்ளை அறிக்கை மட்டும் போதுமா! அல்லது வெள்ளரிக்காயும் வேணுமா ?- அமைச்சர் கிண்டல்

14


முதல்வர் பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கேட்டதற்கு வெள்ளை அறிக்கை மட்டும் போதுமா அல்லது மஞ்சள் , சிவப்பு, பச்சை அறிக்கை வேணுமா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலடித்துள்ளார்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு அமெரிக்கா, துபாய், லண்டன் ஆகிய நாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் 41 நிறுவனங்களுடன் 8830 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் முதலீடுகள் செய்திருப்பதாக தெரிவித்தார்.


முதல்வர் வெளிநாடு பயணம் முடித்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னை திரும்பினார். இந்நிலையில் முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். மற்றும் அதிமுக ஆட்சியில் இதற்கு முன்பு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.


இதற்கு தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை வெள்ளை மனதுடன் தான் பார்க்க வேண்டும். உலக தமிழ் மக்களின் நன்மதிப்பை முதல்வர் பெற்றிருப்பதை எதிர்கட்சி தலைவரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை என்றும் தெரிவித்தார்.


முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை மட்டும் போதுமா அல்லது அதனுடன் சேர்ந்து பச்சை, மஞ்சள் அறிக்கையுடன் வெள்ளரிக்காயும் சேர்த்து தருவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.


தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டவுடன் தொழில் தொடங்க முடியாது என்றும் முதலீடு விஷயத்தில் எதிர்கட்சி தலைவரின் பேச்சு சிறுபிள்ளைதனமாக உள்ளது என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.