IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா தடுப்பு பணியில் அமைச்சரின் மகள்! ஒருவயது மகனை தூரத்தில் நின்று கொஞ்சும் வைரல் புகைப்படம்

Get real time updates directly on you device, subscribe now.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சரின் மகள், தனது ஒரு வயது மகனை தூரத்தில் நின்று கொஞ்சும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான சுரேஷ்குமாரின் மகள் திஷா ஒரு மருத்துவர் என்பதால் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறான். அவனை தனது தந்தை மற்றும் தாயின் பாதுகாப்பில் திஷா விட்டுச் சென்றுள்ளார்.

3 நாட்களாக தனது மகனை பார்க்காமல் திஷா பணியாற்றி வந்த நிலையில், மகனை பார்க்க, தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். தனது மகனை தூரத்தில் நின்றப்படி திஷா பார்த்தார். அப்போது அமைச்சர் சுரேஷ்குமாரின் மனைவி சாவித்ரியிடம் இருந்த விக்ராந்த், தாயை பார்த்ததும் அவரிடம் செல்ல வேண்டும் என்று அழுதுள்ளான். ஆனாலும் சாவித்ரி அவனை விடவில்லை. இந்த பாசப்போராட்டம் பார்ப்போரின் கண்களை கலங்க செய்துள்ளது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader