IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டபுள் ஸ்கீரின் டிஸ்பிளேவுடன் மைக்ரோசாஃட் ஸ்மார்ட் போன் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.


டபுள் ஸ்கீரின் டிஸ்பிளே கொண்ட புதிய மைக்ரோசாஃப்ட் சாதனம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டுயோ என அழைக்கப்படும் புதிய சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் அறிமுகமாகிறது.


புதிய மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டுயோவில் இரண்டு 5.6 இன்ச் ஸ்கீரின்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றை திறந்து பயன்படுத்தும் போது 8.3 இன்ச் ஸ்கீரின் டேப்லட் போன்று பயன்படுத்திக் கொள்ளலாம்.


இதில் வழங்கப்பட்டுள்ள 360 கோணத்தில் மடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் பயனர்களின் தேவைக்கேற்ப பல்வேறு வகையில் சாதனத்தை திருப்பிக் கொள்ளலாம். சர்ஃபேஸ் டுயோவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் மைக்ரோசாஃப்ட் லான்ச்சர் கொடுக்கப்பட்டுள்ளன.


இந்த சாதனம் குறித்து டீசர் வெளியிட்டுள்ள வீடியோவில் டூயல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவில் ப்ராஜக்ட் எக்ஸ்-கிளவுட் எக்ஸ்பாக்ஸ் கேம் ஸ்டிரீமிங் வழங்கப்பட்டுள்ளது.


ஸ்மார்ட்போனை வெளிப்புறமாக திறக்கும்போது சர்ஃபேஸ் டுயோவில் ப்ராஜக்ட் எக்ஸ் கிளவுட் சேவைக்கான டச் கமெண்ட்கள் வேலை செய்யும். புதிய சர்ஃபேஸ் டுயோ அடுத்த வருடம் நவம்பம் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader