மைக்ரோமேக்ஸின் தனது துணை பிராண்டு இந்தியாவில் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது துணை பிராண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது துணை பிராண்டினை இந்திய சந்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிராண்டினை இன் (in) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சப் பிராண்டு மூலம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது.

புதிய பிராண்டு அறிவிப்பினை ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் PLI அனுமதிகளை பெற்றபின் வெளியிடுவதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள புதிய பிராண்டிங் இந்தியர்களின் தற்போதைய டிரெண்டிங் தேவைகளை நிறைவு செய்யும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிராண்டின் தோற்றம், நிறம் உள்ளிட்டவை இந்தியாவின் நீல நிறங்களை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய பயனர்கள் முழுமையாக பயன்பெறும் நோக்கில் இந்த பிராண்டின் எதிர்கால திட்டங்கள் அமைந்திருக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து இருக்கிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க மைக்ரோமேக்ஸ் ரூ. 500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. அந்த வகையில் இன் பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டுள்ளது.

#micromax #micromaxnewrealese#smartphone #in4net

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More