IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது ஈவு இரக்கமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அது உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்து தடயங்களை சேகரிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோரின் தகவல்களை பாதுகாத்து வைக்க வேண்டும். வழக்குகளை உரிய நேரத்தில் முடித்து குற்றவாளிகளுக்கு சரியான நேரத்தில் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

நடவடிக்கை எடுக்காமல், இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடாது. தவறுகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader