IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

எம்.ஜி.ஆர் காவி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தனி டுவிட் : அதிர்ச்சியில் இபிஎஸ் தரப்பு

Get real time updates directly on you device, subscribe now.

புதுச்சேரியில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு சில மர்மநபர்கள் காவிதுண்டு போர்த்தப்பட்டதற்கு தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழக முதல்வர் முறையில் நிர்வாக ரீதியாக ஏதேனும் நடவடிக்கைகள், உத்தரவு ஆகியவற்றை எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி அறிவிப்புகள் வெளியாகும். அதே சமயம் கட்சி ரீதியான எந்த ஒரு உத்தரவு மற்றும் அறிவிப்பு என்றால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் சேர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்படி கடுமையான நடவடிக்கையினை புதுச்சேரி மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இபிஎஸ் தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக தெரிகிறது. கட்சி தொடர்பாக அறிவிப்பு தெரிவித்திருந்தால் இருவரும் சேர்ந்தே அறிக்கை வெளியிட்டிருக்கலாம் என இபிஎஸ் தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Your Digital PR

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader