IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

விஷ ஊசி போட்டு தற்கொலை செய்தது ஏன்? மருத்துவ மாணவரின் உருக்கமான கடிதம் சிக்கியது!!

Get real time updates directly on you device, subscribe now.

முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவன் தனக்கு தானே விஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று எழுதிய கடிதம் போலீசில் சிக்கியுள்ளது.


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் உதயராஜ் (வயது 29). இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதுகலை மயக்கவியல் துறையில் படித்து வந்தார். மதுரை முனிசிபல் காலணியில் இருக்கும் அவரது நண்பர் விஜயகுமார் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல் கல்லூரி சென்று திரும்பிய உதயராஜ், இரவில் வீட்டில் தனியாக இருந்தார்.


கந்துவட்டி தொல்லை

இந்நிலையில் காலையில் வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்பட வில்லை. இதனால் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசாரும் தகவலின் பேரில் விரைந்து வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, உதயராஜ் இறந்து கிடந்தார். அவருக்கு அருகில் ஊசி, மருந்துகள் சிதறி கிடந்தன.


மேலும் அங்கு போலீசார் ஆய்வு செய்ததில், உதயராஜ் எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், எனக்கு மன நிம்மதி இல்லை. எங்கு சென்றாலும் நிம்மதி இல்லை. வேலைச்சுமை அதிகமாக இருகிறது. இதன் காரணத்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன், எழுதப்பட்டு இருந்தது.


இதையடுத்து மாணவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். உதயகுமார் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்து 3 மாதங்களே ஆகின்றன. உதயகுமார் தற்கொலை செய்ததற்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்று போலீசார் விசாரணை செய்து வருகிறனர்.
#madurai #student #doctor #suicide

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader