10.1 C
Munich
Monday, October 3, 2022

குறுந்தொட்டி எனும் சிற்றாமுட்டி செடியின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

Must read

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல, பெயரளவிலும், உயர அளவிலும் சிறுத்திருப்பினும், நோய்களைப் போக்கும் சிற்றாமுட்டியின் வீரியம், கொஞ்சம்கூடக் குறையாது.

முதியவர்ளுக்கு உண்டாகும் வாத நோய்களை நீக்கி, அவர்களோடு துணை நிற்கும் ‘மூலிகை நண்பன்’ சிற்றாமுட்டி! வர்ம மருத்துவத்திலும் சிற்றாமுட்டியின் பங்கு அளப்பரியது.

சிற்றாமுட்டிக்கு சிறுந்தொட்டி, சிறுந்தொட்டை, குறுந்தொட்டி, குறுந்தோட்டி ஆகிய வேறுபெயர்கள் உள்ளன.

தட்டி என்பதற்கு கேடயம் என்ற பொருளில், ‘நோய்களுக்கான கேடயமாக’ இருப்பதால், குறுந்‘தட்டி’ என்ற பெயரும் உண்டு.

பேராமுட்டி எனும் வகையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, ‘சிறு’ எனும் முன்னொட்டு சேர்ந்திருக்கிறது.

இதய வடிவத்தில், வரிவரியான விளிம்புகளுடன் கூடிய இலைகளைக் கொண்ட செடி வகையினம்.

தாவரம் முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். மஞ்சள் நிறத்தில் இதன் மலர்கள் காட்சியளிக்கும். வேர்கள் தடித்திருக்கும்.

‘மால்வேசியே’ (Malvaceae) எனும் குடும்பத்தைச் சார்ந்த சிற்றாமுட்டியின் தாவரவியல் பெயர் ‘சிடா கார்டிஃபோலியா’ (Sida cordifolia).

எஃபிட்ரின் (Ephedrine), பீட்டா சைட்டோஸ்டீரால் (Beta-sitosterol), ஸ்டிக்மாஸ்டீரால் (Stigmasterol), பால்மிடிக் அமிலம் (Palmitic acid) போன்ற வேதிப் பொருட்கள் இதில் செறிந்து கிடக்கின்றன.

சிற்றாமுட்டி முழுத்தாவரம் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. 1.5 மீ. வரை உயரமாக வளரும் சிறு செடி வகைத் தாவரம்.

சிறு கிளைகளில் ஒட்டும் இயல்புடைய மெல்லிய உரோமங்கள் காணப்படும். பல்லுள்ள 3 சிறு மடலான இலைகள், முட்டை வடிவமானவை.

மலர்கள், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறம், காய்கள், உருண்டை வடிவமானவை. விதைகள், மென் உரோமங்கள் கொண்டவை.

இலங்கை, அந்தமான் தீவுகளில் இயற்கையில் ஏராளமாக விளைகின்றது. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது.

மூட்டுவலி, வாத நோய்கள் குணமாக 100 கிராம் சிற்றாமுட்டி வேரை சேகரித்து, கழுவி, காயவைத்துக் கொண்டு, இலேசாக இடித்து கொள்ளவும்.

 

பின்பு ½ லிட்டர் நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, வலியுள்ள இடத்தில் பூசிவர வேண்டும்.

தலைவலி குணமாக 10 கிராம் சிற்றாமுட்டி வேரை நன்கு சுத்தம் செய்து கொண்டு, 1 லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி, ½ லிட்டராக சுண்டவைத்து வடிகட்டி வேளைக்கு 1 டம்ளர் வீதம் 2 வேளைகள் குடிக்க வேண்டும்.

புண்கள் குணமாக பசுமையான சிற்றாமுட்டி இலைகளை தேவையான அளவு அரைத்து காயங்களின் மீது பூச வேண்டும்.

சிற்றாமுட்டி வேர்ப்பொடி 400 கிராம் 3 லிட்டர் தண்ணீரில் இட்டு ¾ லிட்டராக சுண்டக்காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

அதில் சுக்கு மிளகு ஏலக்காய் வெட்டிவேர் வகைக்கு 20 கிராம் எடை அரைத்துப் போட்டு நல்லெண்ணெய் 1 லிட்டர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு வாரம் இரு முறைகள் தேய்த்துத் தலைமுழுகிவர வேண்டும்.

பிசுபிசுப்பான இலைகளைக் கொண்ட குறுஞ்செடிகள். 1 மீ. உயரமானவை. சிறு கிளைகள் ஒட்டும் உரோமங்கள் கொண்டவை. இலைகள் முட்டை வடிவமானவை, 3 மடல்களாகப் பிரிந்தவை.

கஸ்தூரி மஞ்சளின் மணத்தைப் போன்ற வாசனை இந்தச் செடியின் இலைகளில் உள்ளது. இலைக்கோணத்தில் பூக்கள் காணப்படும்.

செந்தொட்டி என்கிற பெயரும் உண்டு. தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்கின்றது.

வேர்கள் மருந்துவப்பயன் கொண்டவை. இவை துவர்ப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. சிறுநீர் எரிச்சல், மாந்தம், இடுப்புவலி, வாத நோய்கள் போன்றவற்றைக் குணமாக்கும்.

காய்ச்சல், மிகுதாகம், மிகுவியர்வை, சீதபேதி இவற்றைக் குணப்படுத்த 20 கிராம் வேரை நசுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி. அளவாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து 50 மி.லி. வீதம் காலை மாலை உள்ளுக்குச் சாப்பிட்டுவர வேண்டும்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article