IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் விளையும் முக்கிய பணப்பியிற்களில் ஒன்று கரும்பு. அதிலும் பொங்கல் பண்டிகையில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல மாவட்டங்களில் கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் உலகளவில் 60 சதவீதம் அளவுக்கு சர்க்கரை கரும்பில் இருந்துதான் பெறப்படுகிறது.

கரும்பை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றனர். அவற்றை முறையாக கட்டுபடுத்தினால் மட்டுமே பயிரில் அதிக லாபம் ஈட்ட முடியும். இளம் குருத்துப் புழு, இடைக்கணுப் புழு, ஆகியவை கரும்பு பயிரை பெரிதும் தாக்கக்கூடிய புழுக்கள் இவற்றை தடுக்கும் முறைகள் பற்றி காண்போம்.

இளம் குருத்துப் புழு:

இந்த பூச்சிகள் கரும்பு பயிர் செய்த 30 நாட்களுக்கு மேல் 90 நாட்களுக்குள் தாக்கக்கூடியவை. இவை இளம் மஞ்சள் நிறமுடைய புழுப்போல் காணப்படும். இலையின் அடியில் முட்டைகள் இட்டு. பின்னர் தண்டை துளைக்கும் . இந்த வகையான பூச்சி தாக்குதலை சில அறிகுறிகளால் அறிந்துக் கொள்ளலாம். தாக்கப்பட்ட கரும்பின் நடுக்குருத்து வாடி, காய்ந்து அழுகிவிடும். அழுகிய குருத்தினுள், சிறு ஈ வகைப் பூச்சிகளின் புழுக்களைக் காணலாம்.

தடுக்கும் முறைகள் :

கரும்புடன் ஊடு பயிராக பாசிப்பயறு, உளுந்து, சோயா, மொச்சை போன்றவற்றை பயிரிடலாம். காய்ந்த நடுக் குருத்துக்களையோ அல்லது முழுவதும் தாக்கப்பட்ட பயிரினையோ நீக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி அமைத்தல், ஒரு ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சிப் பொறி அமைத்தல் ஆகியவற்றின் மூலம் இவ்வகையான பூச்சிகளை அழிக்கலாம்.

வரப்பு ஒரங்களில் உளுந்து மற்றும் பச்சைப் பயிறு செடிகளை பயிரிடலாம். வேப்பம் குருணை ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ இடுதல், வேப்பம் புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 100 கிலோ இடுதல், வேப்ப எண்ணெய் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தெளித்தல் ஆகியவற்றின் மூலம் இந்தப் பூச்சித் தாக்குதலை தடுக்க முடியும்.

இடைக்கணுப் புழு :

இந்த வகையான புழுக்கள் கரும்பு பயிர் நட்ட 90 நாள்கள் முதல் 120 நாள்கள் வரை தாக்கும். இந்த பூச்சி தாக்குதலுக்குள்ளான கரும்பைப் பிளந்து பார்த்தால் உள்ளே வெண் பழுப்பு மற்றும் முதுகில் கருநீல வரிசையான புள்ளிகள் கொண்ட நான்கு கோடுகளையுடைய புழுக்களை காணலாம். மேலும் சேதமுற்ற பகுதி செந்நிறமாக காணப்படும். சேதமுற்ற இடைக்கணுக்கள் மற்ற கணுக்களை விட சிறியதாகவும் மெலிந்தும் காணப்படும். கரும்பு காய்ந்துவிடவும் வாய்ப்பு உண்டு.

தடுக்கும் முறைகள் :

வடிகால் வசதிகளை நன்றாக ஏற்படுத்த வேண்டும். கரும்பின் காய்ந்த சோலைகளை 5 அல்லது 7- வது மாதத்தில் நீக்க வேண்டும். மேலும் தேவைக்கு அதிகமான தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். வரப்பு ஒரங்களில் உளுந்து மற்றும் பச்சைப் பயறுச் செடிகளைப் பயிரிடுதல், வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ போடுதல் ஆகியவற்றின் மூலம் இதனைத் தடுக்கலாம்.

#Mechanisms #controlling #sugarcane #attack #Insects

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader