IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அதிமுகவிற்கு டஃப் கொடுக்கும் மதிமுக! சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு

Get real time updates directly on you device, subscribe now.

வருகின்ற 2021 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தனித்து போட்டியிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை தமிழகமே எதிர்நோக்கி காத்திருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை வழிநடத்திச் சென்ற கருணாநிதி மற்றும்ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் எந்த கட்சி ஆட்சியை பிடித்து அரியணை ஏறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுஒருபுறம் என்றாலும் அனைத்து கட்சிகளும் களப்பணி மற்றும் தேர்தல் கூட்டணி பணிகளை தொடங்கி விட்டன. சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என சீமானும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தொல்.திருமாவளவனும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் மதிமுக கட்சியும் சட்டமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இவ்வாறு வைகோ பதில் அளித்துள்ளார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader