IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

யாருடைய அனுமதியில் முஸ்லீம் தீவிரவாதியின் உடலை இந்து மயானத்தில் புதைத்தனர் ? செந்தில் தொண்டமான் கேள்வி

17


மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் முஸ்லீம் தீவிரவாதியின் உடற்பாகங்களை பாதுகாப்பு படையினர், யாருடைய அனுமதியில் இந்து மயானத்தில் புதைத்தனர் என்று ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாரன் இறுதிகட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அறிவித்து, அவர் ஒரு இந்துவாக இருந்தும் அவரது உடலை கடற்கரையில் புதைத்தனர் பாதுகாப்பு படையினர்.


ஆனால் மட்டகளப்பில் கிறிஸ்தவர்களை கொன்று குவித்த தீவிரவாதிகளின் உடற்பாகங்களை மட்டும் எந்த அடிப்படையில், யாருடைய அனுமதியில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தனர் என்று ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


மட்டக்களப்பு சீயோன் மாகாணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்திய முகமது ஆசாத்தின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதை அடுத்து சில தினங்களாக மட்டக்களப்பில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இதுதொடர்பாக செந்தில் தொண்டமான் கூறுகையில் பாதுகாப்பு படையினரின் இத்தகைய செயற்பாடுகளால் தான் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது. முகமது ஆசாத் என்பவர் மனிதப்படுகொலைக்கு காரணமான பயங்கரவாதி. அவனையும் அவனது குடும்பத்தார்களையும் ஒட்டுமொத்த முஸ்லீம் மக்கள் புறக்கணித்துள்ளனர்.


மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மரணத்திற்கு காரணமான முகமது ஆசாத்தின் உடற்பாகங்களை அவனது சொந்த ஊரான காத்தான்குடி முஸ்லீம் மையவாடிகளில் புதைப்பதற்கே அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு முஸ்லீம் மைய வாடிகளிலும் அனுமதி வழங்கவில்லை.

இராவணன் தான் உலகிலேயே முதல் விமானி


இவ்வாறு இருக்கையில், தான் தோன்றித்தனமாக செயற்பட்ட போலீஸாரும் சில அதிகாரிகளும் ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட முகமது ஆசாத் உடலை இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட செயல், தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இனவிரோதத்தை தோற்றுவிக்கும் செயலாக அமைந்தது.


பாதுகாப்பு தரப்பினரின் இத்தகைய செயற்பாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய பாதுகாப்பு தரப்பினரே இப்படி மூடர்தனமான செயலில் ஈடுபடக்கூடாது என்றனர்.


இலங்கை வாழ் தமிழ்மக்களுக்காக போராடிய தலைவர் பிரபாகரனின் உடலை இந்து மயானத்தில் புதைக்காமல் கடலில் புதைத்த பாதுகாப்பு படையினர், முஸ்லீம் மக்களால் புறக்கணித்த ஒரு தீவிரவாதியின் உடற்பாகங்களை யாருடைய அனுமதியில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது என்று கேட்க விரும்புகிறோம் என்றனர்.


தமிழர்களின் பாரம்பரிய வழிமுறைகளை மாற்றி இந்து மயானத்தில் தீவிரவாதியின் உடலை அடக்கம் செய்தமையானது தமிழர்களின் பாரம்பரியத்தை கொச்சைப்படுத்தும் செயலுக்கு வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த செயல் இந்துக்களை கவலையடைச் செய்துள்ளது.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமகன் தொண்டமான் உட்பட அனைத்து உறுப்பினர்களும் தமிழர் பாரம்பரிய செயற்பாடுகள் அழிவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தள்ளனர்.

#SenthilThodaman #SriLanka # SriLankaattacks #MohammadAzad