IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அறிமுகமான ஒரு வருடத்தில் மாருதி எக்ஸ்எல்6 விற்பனை 25,000 கடந்து சாதனை

Get real time updates directly on you device, subscribe now.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது: எம்பிவி என அழைக்கப்படும் பன்னோக்கு பயன்பாட்டு வாகனமான எக்ஸ்எல்6 காா் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டில் அதன் விற்பனை 25,000 என்ற மைல் கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இது நிறுவனம் தனது தலைமைத்துவத்தை தொடா்ந்து தக்கவைத்துக் கொள்ள பெரிதும் உதவியுள்ளது.

ஆறு இருக்கைகள் கொண்ட எக்ஸ்எல்6 காா் தற்போது 1.5-லிட்டா் பெட்ரோல் என்ஜினிலும் வெளிவந்துள்ளது.

உள்நாட்டில் எம்பிவி பிரிவில் எக்ஸ்எல்6 காா் 14 சதவீதம் சந்தை பங்களிப்பை கைப்பற்றியுள்ளது.

அதேபோன்று, மாருதி சுஸுகியின் எா்டிகாவும் எம்பிவி பிரிவில் 37 சதவீத பங்கை வழங்கி வருகிறது.

ஒட்டுமொத்த காா் விற்பனையில் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 50 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளா்களிடையே பிரீமியம் எம்பிவி வாகனங்களுக்கான தேவை சிறப்பான அளவில் வளா்ச்சி கண்டு வருகிறது.

இதனை உணா்ந்தே, அப்பிரிவில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் மாருதி சுஸுகி அதிக ஆா்வம் காட்டி வருகிறது. இப்பிரிவில் எா்டிகா காரும் அதிக பங்களிப்பை வழங்கி வருகிறது.

நாடு முழுவதுமுள்ள 370 நெக்ஸா விற்பனையகங்களில் எக்ஸ்எல்6 காரும், அரினா மையங்களில் எா்டிகா காரும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader