IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மாருதி சுசூகியின் மினி SUV S-PRESSO அறிமுகம்

78


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mini-SUV S-PRESSO என்ற தனது புதிய ரக காரை மாருதி சுசூகி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த S-PRESSO, இந்திய மற்றும் சர்வதேச பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே உருவாக்கம் பெற்று, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டதாகும். தனது உறுதியான, வலிமையான SUV ஸ்டைலில் இது மேலோங்கி நிற்கிறது. சிறப்பு வாய்ந்த 5-ம் தலைமுறை HEARTECT பிளாட்ஃபார்மில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த வாகனம், 40% அதிக உறுதியான Tensile Steel-ஐ பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது, எனவே வலிமை, பாதுகாப்பு மற்றும் திடமான அமைப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.


S-PRESSO நாடு முழுவதும் பிரத்தியேக ARENA விற்பனை நெட்வொர்க் மூலமாக விற்பனைக்கு வரவுள்ளது. இது அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் உட்பட்டது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மாருதி சுசூகி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த S-PRESSO-வில் சிறப்பான பல அம்சங்களை வழங்கவுள்ளது. புத்தம்புதிய S-PRESSO-வை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து பேசிய, மாருதி சுசூகி இந்தியா-வின் மேலான் இயக்குனரும், தலைமை நிர்வாக இயக்குனருமான திரு. கெனிச்சி அயுகவா அவர்கள் கூறியதாவது, “வாடிக்கையாளருக்கே முன்னுரிமை” என்ற கொள்கையை மாருதி சுசூகியில், நாங்கள் நம்புகிறோம்.


உயர்தரமான கார்களை கட்டுப்படியாகக் கூடிய விலையில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இன்று சிறந்த வடிவமைப்பு, சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட S-PRESSO-வை அறிமுகப்படுத்தியதன் மூலம் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் நிரூபித்துள்ளோம். புதிய மாசுக்கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்ட நமது BS6 ரக கார்களுடன், நமது S-PRESSO–வும் எட்டாவது வாகனமாக இணைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். S-PRESSO தனக்கான பிரிவில் பெரிய வரவேற்பைப் பெறும் என்றும், தொடர்ந்து உருவாகிவரும் இளம் வாடிக்கையாளர்களைக் பெரிதும் கவரும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்”.


S-PRESSO தனித்துவமான SUV அம்சத்துடன், உறுதியான வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. இதன் நேரான A-பில்லர் மற்றும் பின்புற கதவின் வடிவமைப்பு இதற்கு உறுதியான SUV-யின் உணர்வை அளிக்கிறது. நவீன முறையில் கண்ணாடிக்கும் வாகனத்தின் அமைப்புக்குமான விகிதாச்சாரம், கவனமாக சரியான அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பாகங்கள் இதற்கு உறுதியான தோற்றத்தை அளிக்கிறது. Lifted door-sill மூலம் அதிக Ground Clearance கிடைப்பதால், இது உறுதியையும், கம்பீரமான தோற்றத்தையும் வெளிப்படுத்துகிறது. இதன் கட்டுக்கோப்பான அமைப்பிற்கு, R14 டயர்களைக் கொண்ட சதுர வடிவாக்கப்பட்ட Wheelarches இதற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.


Single Aperture Head Lamp மற்றும் Grille கிராபிக், இதற்கு ஒரு மாறுபட்ட மற்றும் ஆளுமைவாய்ந்த கம்பீர தோற்றத்தினை அளிக்கிறது. அகலமான C-Signature Tail lamps உயர்த்தி பொருத்தப்பட்டுள்ளதால், இது சராசரி ரகங்களை விட மேலோங்கி நிற்கும். மேலும், உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய வடிவமைப்பை கொண்டுள்ளது. S-PRESSO ஒரு தனித்துவமான மற்றும் ஆச்சரியமூட்டும் உட்புற வடிவமைப்புடன் வருவதால், இதற்கு வேறுபட்டு நிற்கும் ஒரு ஸ்டைல் உள்ளது.


இதன் பிரதான அம்சமாகக் கருதப்படுவது, Dynamic Centre Control தான். இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இது ஒரு ஸ்போர்ட்ஸ் வாட்ச் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. டிரென்டியான Infotainment system, Digital Speedometer ஆகியவை ஒருசேர இருப்பது இந்த காரின் தனித்துவ ஸ்டைலுக்கு கூடுதல் பலமாகும். மேலும், இந்த கார் நவீன தொழில்நுட்பம் மற்றும் உறுதியான வடிவமைப்பின் அற்புதமான கலவையாகும்.


S-PRESSO உயர்த்தப்பட்ட இருக்கை அமைப்பினை கொண்டுள்ளதால், நன்றாக அமர்ந்து ஓட்டும் வசதியை ஓட்டுனருக்கு தருகிறது. மேலும் இதனால், பயணிகள் சுலபமாக உள்ளே செல்லவும் வெளியே வரவும் முடியும், கால்களுக்கு அதிக இடவசதியையும் தருகிறது. பெரிய கேபின் வசதி, அட்டகாசமான கருப்பு மற்றும் ஒளிர் வண்ணங்களை கொண்டு கண்கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், இது இளம் வாடிக்கையாளர்களை கவரும்.


பி.மனோகர்லால் ஜுவல்லர்ஸின் ப்ரைடல் சோய்ரீ 2019 கண்காட்சி பேஷன் ஷோ


S-PRESSO-வில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பொருட்கள் வைக்க பிரத்தியேக பகுதிகள் சௌகர்யமாக உள்ளன. இதில் Open Tray, Glove box, Door trim மற்றும் செல்போன்களை வைக்க Door console pocket போன்று, பொருட்கள் வைக்க பல இடவசதிகள் உள்ளன. முதல் முறையாக இவ்வகை கார்களில், S-PRESSO Steering Mounted Audio மற்றும் Voice controls-ளுடன் வருகிறது. அதிநவீன Smartplay ஸ்டுடியோ இருப்பதால், இசை, பொழுதுபோக்கு மற்றும் பயண மேப் வசதி ஆகியவை எப்போது விரல் நுனியில் இருக்கும். இது Android Auto ஆப், Apple Carplay மற்றும் இதர Smartplay Studio ஆப் மூலமாக, எளிதாக பயன்படுத்தக்கூடிய வண்ணமயமான கிராபிக் யூசர் இன்டர்ஃபேஸை கொண்டுள்ளது.


S-PRESSO-வில் BS6 விதிகளுக்கு உட்பட்ட 1.0 L K10 எஞ்சின் உள்ளது. இது வழக்கமான மேனுவல் மற்றும் AGS (ஆட்டோ கியர் ஷிஃப்ட்) ஆகிய இரண்டு ரகங்களில் வருகிறது, அற்புதமான செயல்பாட்டையும், எரிபொருள் சிக்கனத்தையும் தரக்கூடியது. S-PRESSO பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விடாமுயற்சிக்கு கிடைத்த ஒரு பலனாகும். சுசூகியின் ஐந்தாம் தலைமுறை HEARTECT Platform-ல் உருவாக்கப்பட்ட, S-PRESSO-வில் நடைமுறையில் உள்ள இந்திய பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளன.


முன்புற ஆஃப்செட் க்ராஷ், சைடு இம்பேக்ட் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு என அனைத்திலும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது. HEARTECT Platform மோதலை சிறப்பாக உள்வாங்கும் திறனையும், வாகனத்தின் பாடியின் மீது மோதலின் ஆற்றலை பகிர்ந்துவிடும் சக்தியையும் கொண்டுள்ளது, இதனால் பயணிகள் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.


S-PRESSO-ல் இரட்டை ஏர்பேக்ஸ், EBD (Electronic-Brake Force Distribution) எனப்படும் அம்சத்துடன் கூடிய ABS (Anti-Lock Braking System) அமைப்பு, Pre-tensioners மற்றும் Force Limiters-களுடன் கூடிய சீட் பெல்ட்கள், ஓட்டுனர் / ஓட்டுனருடன் அமர்பவருக்கான சீட் பெல்ட் reminder, காரை நிறுத்த உதவும் rear parking assist system, high speed warning alert மற்றும் reverse parking sensors ஆகியவற்றை கொண்டுள்ளது.


#Maruti Suzuki #Mini SUV S-PRESSO #Introduction