IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தேஷ் கீ ஷான் மாருதி சுசூகி ஆல்டோவின் 20 ஆண்டுகளாக நம்பிக்கையின் சின்னம்! இந்தியா பெருமிதம்

Get real time updates directly on you device, subscribe now.

· கடந்த 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தியாவின் #1 விற்பனையாகும் மகிழுந்து
· 40 லட்சத்துக்கும் அதிகமான பெருமைமிகு ஆல்டோ குடும்பத்தினர்
· இந்தியாவில் மகிழுந்து முதல் முறையாக வாங்குவோரின் விருப்பத் தேர்வு

இந்தியாவிலுள்ள 40 லட்சங்களுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பெருமித உணர்வோடு, இந்தியாவின் பிரபல மகிழுந்தான ・மாருதி ஆல்டோ, ஈடு இணையற்ற துறைசார்ந்த பெஞ்ச்மார்க் அளவுகோல்களுடன் 20 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இளம் இந்தியாவின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்பத் தன்னை உருவாக்கிக் கொள்வதற்கு, ஆல்டோ குடும்பங்களின் தீவிர அன்பைப் பெற்ற பாரம்பரியம் மிக்க ஆல்டோ ஐகானிக் பிராண்டே சாட்சியாகும்.

கடந்த 20 ஆண்டுகளில் மாருதி சுசூகி ஆல்டோ சமகாலத்துக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களையும், மேம்பாடுகளையும் சந்தித்ததுடன், வாடிக்கையாளரின் வளரும் தேவைகளை நிறைவு செய்ய புது அம்சங்களையும் இணைந்துள்ளது. ஆல்டோ வெற்றியின் இரகசியம் அதன் வித்தியாசமான கண்கவர் வடிவமைப்பு, எளிதான ஒட்டம், உயர் எரிபொருள் சிக்கனம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, சுகமான அம்சங்கள், அனைவருக்கும் ஏற்ற விலை ஆகியவையே ஆகும். முதல் முதலாக மகிழுந்து வாங்குவோருக்குத் தொடு திரை ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, இபிடி-யுடன் கூடிய ஏபிஎஸ், ட்யூயல் டோன் இண்டீரியர், ட்யூயல் ஏர்பேக் ஆகிய பிரிமியம் அம்சங்களயும் ஆல்டோ இப்போது வழங்குகிறது.

மைல்கல் சாதனை குறித்து மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், செயல் இயக்குனர் (சந்தையியல் & விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவாத்சவா கூறுகையில் 挿கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியா பயணிக்கும் போக்கை ஆல்டோ மாற்றியுள்ளது. மேலும் கடந்த 16 ஆண்டுகளாக இந்தியாவின் நெ.1 விற்பனையாகும் மகிழுந்தாகவும், இந்தியக் கார் வாங்குவோருக்குக் கொடுக்கும் பணத்தின் மதிப்புக்கு ஈடாக சிறப்பு அம்சங்களையும் வழங்கி இதயங்களை வென்றெடுத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. ஆல்டோ இன்றைக்கு 40 லட்சம் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுடன் ஒத்திசைய பிராண்டின் காந்த ஈர்ப்பே காரணமாகும்.

ஒவ்வொரு முறை மேம்படுத்தும் போதும் தனது எழிலான தோற்றத்தை வலுப்படுத்துவதால் முதல் முறையாக வாங்குவோரின் விருப்பத் தேர்வாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது. 76% ஆல்டோ வாடிக்கையாளர்கள் இதைத் தங்கள் முதல் விருப்பமாக 2019-20இல் தேர்ந்தெடுத்துள்ளனர். இது நடப்பு ஆண்டில் 84% ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு பிராண்ட் ஆல்டோ ・தேஷ் கீ ஷான்・அதாவது தேசத்தின் பெருமையாக நிலை பெற்றதுடன், தனது 40 லட்சம் வாடிக்கையாளர் இடையே வலுவான பெருமித உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. இது இந்தியாவிலுள்ள வேறெந்த மகிழுந்தும் சாதிக்காத ஈடு இணையற்ற சாதனை என்பது குறிப்பிடத்தக்கது・என்றார்.

Intellectual Property Protection | Trade Marks

2000இல் அறிமுகமான ஆல்டோ, 2004ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் அதிக விற்பனையாகும் நெ.1 மகிழுந்தாகத் திகழ்ந்தது. மேலும் 2008இல் 10லட்சம் மகிழ்ச்சியான குடும்பங்களின் ஓர் அங்கம் என்னும் மைல்கல்லையும் எட்டியது. அடுத்த மைல்கல் சாதனையான 20 லட்சம் விற்பனையை 2012லும், 30 லட்சம் விற்பனையை 2016லும் எட்டியது. தற்போது 2020 ஆகஸ்டில் ஆல்டோ மகத்தான 40 லட்சம் விற்பனை இலக்கத்தைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது. ஈடு இணையற்ற வகையில் ஆல்டோவின் ஏற்பு காரணமாகக், கடுமையான போட்டி நிலவும் பயணிகள் மகிழுந்து பிரிவில், அதிக அளவில் விற்பனையாகும் மாடலாகக் கடந்த 16 ஆண்டுகளாக விளங்குகிறது.

நாடு முழுவதும் மூலை முடுக்கெங்கும் பிரபலமாகத் திகழும் ஆல்டோ பெரும்பான்மை இந்தியர்களின் ஆதரவு பெற்ற மகிழுந்தாகத் தொடர்ந்து திகழ்கிறது. 2019-20 நிதியாண்டில் 59% ஆல்டோ விற்பனை உள்நாட்டுச் சந்தைகளிலிருந்தே வந்துள்ளது. இது நடப்பு ஆண்டில் 62% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் பெருமையாகத்・திகழும் மாருதி சுசூகி ஆல்டோ பன்னாட்டுச் சந்தைகளிலும் தனது தடத்தைப் பதித்துள்ளது. லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியச் சந்தைகள் உள்பட 40 நாடுகளில் ஏற்றுமதியாகிறது.

நவீன ஏரோ-எட்ஜ் வடிவமைப்பு மற்றும் க்ராஷ் & பாதசாரி பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாருதி ஆல்டோ இந்தியாவின் முதல் பிஎஸ்6 இணக்க நுழைவு நிலை மகிழுந்தாகும். செயல் திறனை மேம்படுத்தும் மாருதி சுசூகி முனைவுகள் காரணமாக, அனைவருக்கும் ஏற்ற விலையிலும், பெட்ரோல் லிட்டருக்கு / 22.05 கிமீ மற்றும் சிஎன்ஜி கிலோவுக்கு / 31.56 கிமீ எனச் சான்றளிக்கப்பட்ட எரிபொருள் சிக்கனத்திலும், இந்தியாவின் பிரபல மகிழுந்தாக விளங்குகிறது. மாருதி சுரூகி ஆல்டோ பெட்ரோல் மற்றும் ஃபேக்டரி ஃபிட்டெட் சிஎன்ஜி வாய்ப்புடன், இந்தியா முழுவதும் 1900 நகரங்களிலுள்ள 2390 முகவர் விற்பனை அவுட்லெட்களைக் கொண்ட மாருதி சுசூகி அரீனா விற்பனை வலைப்பணி மூலம் விற்கப்படுகிறது.

#alto #deshkisaan #marutisuzuki #1bestseller #in4net

Intellectual Property Protection | Trade Marks

ISSUED BY
Corporate Communications
Maruti Suzuki India Limited
1, Nelson Mandela Road, Vasant Kunj, New Delhi
Ph: 91-11- 4678 1000
Email: corp.comm@maruti.co.in

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader