5.5 லட்சம் விற்பனையை தாண்டியது மாருதி நெக்ஸ்ட் ஜென் எர்டிகா

Get real time updates directly on you device, subscribe now.

நகர மற்றும் ஸ்டைலிஷ் இந்தியாவைக் கவரும் வகையில் நவீனம், வசதி மற்றும் ஏராளமான புதிய தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட மாருதி சுசூகியின் நெக்ஸ்ட் – ஜென் எர்டிகா வாடிக்கையாளர்களின் இதயங்களை வென்று இந்தியாவின் நெ.1 எம்பிவி-யாக உருவெடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக 5.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் சந்தையில் முன்னணி இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. நிதியாண்டு 20-21இல் 2020 செப்டம்பர் வரை எம்பிவி பிரிவில் 47% சந்தைப் பங்களிப்புடன் எர்டிகா வலுவாகத் தடம் பதித்துள்ளது.

மாருதி சுசூகியின் புரட்சிகரமான வடிவமைப்பு உணர்வுகள் மற்றும் தொழில்நுட்பத் திறனுக்கு, எர்டிகா சிறந்த சான்றாகும். பிராண்ட் மதிப்பு, ஆர்வம், வசதி மற்றும் அன்பு ஆகியவற்றின் கலவை கொண்ட மக்களிடையே தனது வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்கிறது. குடும்பம் மற்றும் வணிகத் தேவைகளையும் வலுவாக இணைக்கிறது.

வெற்றி குறித்து மாருதி சுசூகி இந்தியா செயல் இயக்குனர் (சந்தை & விற்பனை) சஷாங்க் ஸ்ரீவாத்சவா கூறுகையில் ‘கடந்த பல ஆண்டுகளாகப் பிராண்ட் எர்டிகா அதன் ஸ்டைல், இடம், வசதி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் காரணமாக, எம்பிவி பயன்பாட்டின் கருத்துக்கு மறுவிளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் முதல் காம்பேக்ட் எம்பிவி என்னும் பெருமையுடன் திகழும் எர்டிகா நவீன தொழில்நுட்பப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. 5.5 லட்சம் அலகுகள் விற்பனை என்னும் மகத்தான சாதனை அதன் வெற்றிக்குச் சான்றாக விளங்குகிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் முடிவை எடுக்கும் போது யுவி-க்களுடன் இணைத்தே எம்பிவிக்களை கருதுகின்றனர். இவ்வாறு நாட்டில் அதிக விற்பனையாகும் யுவிக்களுடன் இணைத்தே கருதப்பட்டாலும், எர்டிகா சந்தையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்திச் சம்மந்தப்பட்ட பிரிவில் சந்தைப் பங்கை அதிகரித்துள்ளது’ என்றார்

infographic1

2012 ஏப்ரலில் அறிமுகமான எர்டிகா புத்தம் புதிய பன்முகப் பயன்பாட்டுப் பிரிவை உருவாக்கி உள்ளது. 1.5 லி கே-வரிசை எஞ்சின் ஆற்றல், ஸ்மார்ட் ஹைபிரிட், ஏடி தொழில்நுட்பம் ஆகியவற்றில் இயங்குவதால், சுகமான ஓட்டும் அனுபவத்தைத் தருகிறது. இதன் வெற்றிக்கு மெருகூட்டும் வகையிலுள்ள மற்றொரு சிறப்பம்சம் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட எஸ்-சிஎன்ஜி தொழில்நுட்பம் கொண்ட ஒரே எம்பிவி மாருதி சுசூகி எர்டிகா மட்டுமே ஆகும்.

மூன்றாவது ரோ-ரிக்ளைனர், நெகிழ்வுத்தன்மை, சொகுசான இருக்கைகள், பெரிய லக்கேஜ் கம்பார்ட்மெண்ட் ஆகியவை காரணமாகக் கிடைத்துள்ள தாராள இட வசதி, வாடிக்கையாளரிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்டீரிங்க் மவுண்டெட் ஆடியோ, காலிங்க் கண்ட்ரோல், ஏர் கூல்ட் கப் ஹோல்டர், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், ஒவ்வொரு வரிசைக்கும் சார்ஜிங்க் சாக்கெட் ஆகியவை இதன் ஸ்டைலுக்கு இன்னும் அழகூட்டுகிறது. ட்யூயல் ஏர்பேக், ஹில் ஹோல்ட் (ஏடி மட்டும்), மின்னணு ஸ்டபிலிடி புரோக்ராம் (ஏடி மட்டும்), இபிடி-யுடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய சிறப்பம்சங்களுடன், நெக்ஸ்ட் ஜென் எர்டிகாவில் பாதுகாப்புக்கே சிறப்பான முன்னுரிமை.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader