IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மல்டி-பர்பஸ் வேன் மாருதி சுசூகி ஈகோ இப்போது BS6 தரக் கட்டுப்பாட்டுடன் வருகிறது

150

 

BS6 இணக்க மாற்றத்தில் முன்னிலை வகிக்கும் வகையில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் மல்டி-பர்பஸ் வேன் ஈகோ வாகனத்தின் BS6 இணக்க மாடலை இன்று அறிமுகப்படுத்தியது. அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்கு முன்பாகவே மாருதி சுசூகி தனது 9ஆவது BS6 இணக்க மாடலான ஈகோ வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 2019இல் ஈகோ மொத்த விற்பனை 1 லட்சத்தை தாண்டி உள்ளது. 2018 விற்பனையுடன் ஒப்பிடுகையில் 36% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சிறந்த மைலேஜ், சிறந்த இன்-செக்மெண்ட் வசதி, இடம் & ஆற்றல், குறைந்த பராமரிப்புச் செலவு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.

BS6 இணக்க ஈகோ அறிமுக விழாவில் மாருதி சுசூகி செயல் இயக்குனர் (சந்தையியல் & விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவாத்சவா பேசுகையில் ‘எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான போக்குவரத்துத் தீர்வுகளை வழங்க மாருதி சுசூகியில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஈகோ வாகனத்தில் அறிமுகமாகியுள்ள BS6 தரக் கட்டுப்பாடு சுத்தமான சுகாதாரத்துக்கான எங்கள் உத்தரவாதத்தை மேலும் ஊக்குவிக்கும். ஈகோ அறிமுகமாகிப் பத்தாண்டுகள் கடந்த நிலையில் வாங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் உள்ள 84% வாங்குவோரைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இதன் ஸ்டைல், தாராள இட வசதி கொண்ட வடிவமைப்பு மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு ஆகியவை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளன. வணிகம் மற்றும் குடும்பத்துக்காக இதை வாங்க வேண்டுமெனத் தேர்வு செய்யும் 50% அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சமரசமற்ற, ஈடு இணையற்ற வசதியையும், பாதுகாப்பையும் ஈகோ வழங்குகிறது. இந்தப் பிரிவில் ஈகோ மூலம் வலுவான தடத்தைப் பதிப்போம் என்ற் நம்பிக்கையுடன், வாடிக்கையாளர்களின் தொடர் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

வேன் பிரிவில் மிகவும் பாதுகாப்பாகக் கருதப்படும் ஈகோ வாகனத்தில் டிரைவர் ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங்க் சென்சார், டிரைவர் & கோ-டிரைவர் சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. BS6 1.2லிட்டர் பெட்ரோல் இணக்க எஞ்சின் லிட்டருக்கு / 16.11 கிமீ உடன் எரிபொருள் சிக்கனம் தரும். 54 கேடபிள்யூ @ 6000 ஆர்பிஎம் ஆற்றல் மற்றும் 98என்எம் @ 3000 ஆர்பிஎம் டார் கூடுதல் சிறப்பு அம்சங்களாம். பெட்ரோல் மாடலுடன் மாருதி சுசூகி எஸ்-சிஎன்ஜி தொழில்நுட்பம் ஈகோ வாகனத்தையும் வழங்குகிறது.

 

#maruthi #suzuki #EECO