IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தீபாவளி பலகாரத்தால் பாதிக்கப்பட்ட & பாவம்பட்ட கல்யாணமான ஆண்கள் சங்கம்

0 32

தீபாவளி என்றாலே புத்தாடைகள் உடுத்தி உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடும் விழாவாகும். குறிப்பாக இனிப்பு காரம் செய்வதற்கு அனைத்து வீடுகளிலும் தனிமுக்கியத்துவம் கொடுத்து செய்து வருவார்கள்.

குறிப்பாக இனிப்பு பலகாரம் செய்வதற்காக 15 நாட்களுக்கு முன்னரே தேவையான அனைத்து பலசரக்கு சாமான்களையும் வாங்கிக் கொண்டு, அதை ரைஸ்மில்லில் அரைத்து அதன் பக்குவத்திற்கேற்ப தயார் செய்வார்கள். இதில் முக்கியமான (பாவப்பட்ட) தகவல் என்றால் அதை சமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கல்யாணம் ஆன கணவர்கள் தான் செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதனால் என்னவோ திருவிழா என்றாலே கணவர்கள் தலைதெறிக்க ஓடும் சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.

தீபாவளி திருநாளிற்கு இன்னும் ஐந்துநாட்களே உள்ள நிலையில் தற்போது வாட்ஸ்ஆப்பில் ஒருதகவல் பரவி வருகின்றது. அதில் கூறியதாவது என்னவென்றால் காரம், ஸ்வீட் உங்களுக்கு செய்ய தெரிஞ்சா அடுப்படியில் செய்து பரிமாறுங்கள். அதைவிட்டு அடுத்த வீட்டில் செய்றாங்க அதனால் நானே தான் செய்வேன்னு கணவனிடம் அடம் பிடிக்காதீங்க.

ஒரு எட்டு போனா Adayar Ananda Bhavan கடை இருக்கு. இல்ல இரண்டு எட்டு போனா Nellai Lala Sweet sweet கடை இருக்கு. அதைவிட்டு தீபாவளிக்கு இரண்டு நாள் தான் லீவு. புருஷன்கிட்ட போய் அந்த கடையில் கடலை மாவு வாங்கிட்டுவா, அப்பதான் முறுக்கு மஞ்சளா வரும், இந்த கடையில் அரிசி வாங்கிட்டுவா அப்ப தான் கலர் வெள்ளையா, ௫சியா இருக்கும்னு டார்சர் செய்யாதீங்க.

முக்கியமா, ஏங்க… இங்க வாங்க இந்த முறுக்கு புழிய கஷ்டமா இருக்கு, அந்த மைசூர்பா கிண்ட கஷ்டமா இருக்குனு husband-ஐ டார்ச்சர் செய்யாதீங்க… please.

முக்கியமா எதை செஞ்சாலும் இது எப்படி இருக்குனு சாப்பிட்டு சொல்லுங்கனு புருஷனை டெஸ்ட் லேப் எலியா மாத்திடாதீங்க. என்ன இருந்தாலும் வீட்டில் செய்யும் பலகாரம் போல வருமானு வீக் எண்ட் முழுவதும் வீட்டை அதகளம் செய்யாம சமத்தா புருஷன் சொல்லும் ஐடியாவை கேட்டு நிம்மதியா தீபாவளியை enjoy செய்யுங்க. முக்கியமா ஊர்பட்ட முறுக்கை சுட்டு வச்சிட்டு வாரம் பூரா சாம்பாருக்கு தொட்டு சாப்பிட சொல்றது ஏல்லாம் டூமச்…

தீபாவளியை enjoy செய்ய ஆயிரம் வழி இருக்கு. பலகாரம் பன்னி அந்த அடுப்பு சட்டியிலே டைம் waste செய்னு நரகாசூரன் கூட சொல்லல.

இப்படிக்கு –
பலகாரத்தால் பாதிக்கப்பட்ட & பாவம்பட்ட கல்யாணமான ஆண்கள் சங்கம்.