IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும்! எச்சரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

சென்னையில் மாஞ்சா கயிறு பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஊரடங்கை சமாளிக்க பொழுது போக்கு செயல்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பட்டம் விடுவது அதிகரித்துள்ளது.

சென்னையில் மாஞ்சா நூல் கட்டி பட்டம் விடுவதால் ஆங்காங்கே அசம்பாவிதங்கள், உயிரிழப்பு மற்றும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிறுவர்களும், இளைஞர்களும் மாஞ்சா நூலில் பட்டம் விட தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மாஞ்சா நூல்களை கட்டி பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

மாஞ்சா நூல் கொண்டு பட்டம் தயாரித்து விடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், இதுவரை பட்டம் விட்டதால் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader